சென்னை: தியேட்டர், மாலில் களைகட்டும் மார்கழி இசை திருவிழா!

மூத்த கர்நாடக இசைக் கலைஞரான தட்சிணா மூர்த்தி மலையாளம், தமிழ் மற்றும் இந்தி படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

By: Updated: December 4, 2019, 09:24:29 PM

Margazhi Season : ராயப்பேட்டையில் உள்ள சத்யம் தியேட்டரில் கிறிஸ்துமஸ் வாரத்தில் ‘மெட்ராசனா மியூஸிக் ஃபெஸ்டிவல்’ என்ற நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் விக்னேஷ் ஈஸ்வர், பாம்பே ஜெயஸ்ரீ போன்ற இசைக்கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

சென்னையைச் சேர்ந்த நாடகக் குழுவான ‘மெரினா’ டிசம்பர் 7 ஆம் தேதி டாக்டர் வி தட்சிணா மூர்த்தியின் வாழ்க்கை குறித்த இசை நாடகத்தை வி.ஆர் சென்னை மாலில் மாலை 6.30 மணி முதல் இரட்டை சகோதரிகளான அர்ச்சனா மற்றும் ஆரத்தி ஆகியோருடன் நடத்துகிறது. கல்கி தியேட்டரிலும் அவர்கள் நிகழ்ச்சி நடத்துகின்றனர். டிசம்பர் 8-ம் தேதி மாலை 6.30 மணிக்கு அரங்கம் ஸ்கைடெக்கில் அர்ச்சனா நாகேஷ் நடனக் குழு நிகழ்ச்சி நடத்தவுள்ளது. இதை அனைவரும் கண்டுகளிக்கலாம்.

மூத்த கர்நாடக இசைக் கலைஞரான தட்சிணா மூர்த்தி மலையாளம், தமிழ் மற்றும் இந்தி படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். 125-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்திருக்கும் தட்சிணா மூர்த்தி, 63 ஆண்டுகளில் சுமார் 850 பாடல்களை இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Margazhi music festival chennaiyil thiruvaiyaru

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X