/indian-express-tamil/media/media_files/ofLRhCkpIghtJdrmA22a.jpg)
Vijay Sethupathi about Vaazhai Movie
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான‘வாழை’ திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் பொன்வேல், நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இயக்குநர்கள், நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் 'வாழை’ படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜை வாழ்த்தி வருகின்றனர்.
இந்த நிலையில், வாழை படத்தை பார்த்த விஜய்சேதுபதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Credit: NewsTamil 24*7
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படம் பார்த்தேன், ஒரு அற்புதமான படம், இன்னும் அந்த படத்திற்குள்ளேயே இருக்கிறேன். அந்த படத்தில் அவர் பேசிய அரசியல், வசனம், நடித்தவர்கள், அந்த ஊரில் இருக்கும் ஒருவனாக நான் அதில் மாட்டிக்கொண்டு இருக்கிறேன். இதுபோன்ற படம் எடுத்த மாரி செல்வராஜ்க்கு நன்றி.
இதுபோன்ற செய்திகளை கேட்கும் போதும், செய்தி தாள்களில் பார்க்கும் போதும் சாதாரணமாக கடந்து போய் இருப்போம். இதற்கு பின்னாடி இருக்கும் வாழ்க்கையை இவ்வளவு அழுத்தம் திருத்தமாக புதிய வைத்ததற்கு நன்றி. படத்தை தியேட்டரில் வந்து பாருங்க, ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும்’ என்று விஜய் சேதுபதி அந்த வீடியோவில் உணர்ச்சி பொங்க பேசினார்.
முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வாழை படத்தத்தைப் பார்த்தபின்னர், சென்னையில் உள்ள, மாரி செல்வராஜின் வீட்டிற்கே சென்று, அவரைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.