scorecardresearch

கைய புடிச்சான்… அதற்கே கர்ப்பமா? மாரி சீரியலை கலாய்க்கும் ரசிகர்கள்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மாரி சீரியலை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Mari Serial is being roasted by netizens
நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்படும் மாரி சீரியல்

பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாரி என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு ஒரு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.
சீரியலும் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக செல்லும். இந்த 45 நிமிட சீரியலை மக்கள் தொலைக்காட்சியில் பார்ப்பது மட்டுமின்றி ஜீ ஓடிடி தளத்திலும் கண்டு ரசித்து வருகின்றனர்.

அதற்கு காரணமும் உண்டு. இந்தச் சீரியலில் ஒரு தேவதை வந்துவிட்டால் உன்னை தேடியே எனப் பாடி ரசிகர்களை கிரங்கடித்த தேவயானி முத்துப்பேச்சி என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.
சீரியலில் மாரிக்கும், சூர்யாவுக்கும் திருமணம் நடந்து முதலிரவு தொடங்கிய நிலையில், சூர்யா, மாரி கையை பிடிக்க, மாரி கர்ப்பமாவது போல் காட்சிப்படுத்தியுள்ளது.

இதைப் பார்த்த ரசிகர்கள், இது என்ன 90ஸ் கிட்ஸ் மேட்டராக இருக்கே என அங்கலாய்து வருகின்றனர்.
மறுபுறம் இணையவாசிகளும் இந்தச் சீரியலை சமூக வலைதளத்தில் ஒரு பிடிபிடித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Mari serial is being roasted by netizens

Best of Express