குணசேகரனாக மாரிமுத்து நடித்த கடைசி எபிசோடுகள்; சன் டிவி எதிர்நீச்சல் சீரியலின் ப்ரோமோ வெளியீடு
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடிகர் மாரிமுத்து கடைசியாக நடித்த எபிசோடுகளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
Advertisment
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் குணசேகரன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து கலக்கியிருப்பார். இந்தநிலையில், சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக மாரிமுத்து மரணம் அடைந்திருந்தார். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மாரிமுத்து கடைசியாக எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொடுத்த எபிசோடுகளுக்கான ப்ரோமோ இன்று வெளியாகி இருக்கிறது. அதில் நந்தினி புதிதாக தொடங்கி இருக்கும் பிசினஸ் விஷயம் குணசேகரனுக்கு தெரிய வந்திருக்கிறது. நந்தினி, ஜனனியைக் கூட்டிட்டு காரில் தான் செய்த சாப்பாட்டுடன் கிளம்ப தயாராகிறார். அப்போது ஞானம் மற்றும் கதிரோடு காரில் அங்கு வரும் குணசேகரன், நந்தினியும் ஜனனியும் சாப்பாடு பாத்திரங்களோடு நிற்பதை பார்த்ததும், ஏதோ சோறாக்கி எடுத்துட்டு போற மாதிரி இருக்கு என்று கேள்வி கேட்கிறார்.
அதற்கு நந்தினி சும்மா கேள்வி கேட்டுகிட்டே இருக்காதீங்க, சாமி குத்தமா ஆகிடும் என்று சொல்ல, அதற்கு கதிர் அப்போ வா நானும் சேர்ந்து வருகிறேன், நாலு பேருமா சேர்ந்து போயிட்டு வந்துரலாம் என்று சொல்ல, அதற்கு நந்தினி நாளும், நாற்பதும் மாமாவுக்கு சுத்தமா ஆகாது என்று சொல்ல, அதற்கு குணசேகரன் ஏய் மரியாதையா உண்மைய சொல்லிரு என்று மிரட்டுகிறார்.
Advertisment
Advertisement
அதைத் தொடர்ந்து வீட்டுக்குள் வந்த குணசேகரன் டைனிங் ஹாலில் இருந்தபடி தன்னுடைய அம்மா விசாலாட்சியிடம் சோத்த பொங்கி வீட்டு பொம்பளைங்கள எங்கயோ அனுப்பி வச்சிருக்கு, அது என்ன ஏதுன்னு கேட்டு சொல்லுங்கப்பா என்று கேட்கிறார். அப்போது புரியாமல் விசாலாட்சி முழித்துக் கொண்டிருக்க, வெளியே நின்று கொண்டிருக்கும் ரேணுகாவும், ஈஸ்வரியும் விசாலாட்சியிடம் சைகை மொழியில் ஆமாம் என்று சொல்லும் படி சிக்னல் காமிக்கின்றனர். அதை புரிந்து கொண்ட விசாலாட்சி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்.
இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கும் நிலையில குணசேகரன் ஆக மாரிமுத்து நடித்த கடைசி எபிசோடு இதுதான் என்று நடிகர் கமலேஷ் இன்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதுவும் மாரிமுத்து இன்று கலகலப்பான ஜாலியான எபிசோட்டில் நடித்து முடித்திருக்கிறார் என்று கமலேஷ் கூறியிருக்கும் நிலையில், இந்த எபிசோடுகளுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“