நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மி டூ பிரச்சனையில் சிக்கியுள்ள பல பிரபலங்களில் ஒருவரான வைரமுத்துவிற்கு ஆதரவாக இயக்குநர் மாரிமுத்து கொச்சை கருத்து தெரிவித்துள்ளார்.
Advertisment
1993ம் ஆண்டு அரண்மனை கிளி படத்தின் மூலம் துணை இயக்குநராக அறிமுகமானவர் மாரிமுத்து. பல படங்களில் நடிகராகவும் நடித்திருக்கும் இவர், கண்ணும் கண்ணும் மற்றும் புலி வால் படத்தை இயக்கியுள்ளார். இவர் சமீபத்தில் வெளியான, கடைக்குட்டி சிங்கம் மற்றும் பரியேறும் பெருமாள் படத்திலும் நடித்துள்ளார்.
வைரமுத்துவிற்கு ஆதரவாக இயக்குநர் மாரிமுத்து சர்ச்சை கருத்து
இவரைத் தனியார் ஊடகம் ஒன்று சமீபத்தில் பேட்டியெடுத்தது. அந்தப் பேட்டியில் மி டூ புகார் குறித்த கேள்விகளும் எழுப்பப்பட்டது. மேலும், வைரமுத்து பெயரும் இந்தப் புகாரில் ஈடுபட்டிருப்பது குறித்து கேட்டபோது, கோவத்தில் கொந்தளித்த மாரிமுத்து கொச்சையான வார்த்தைகளைப் பிரயோகித்து வைரமுத்துவை நியாயப்படுத்திப் பேசியுள்ளார்.
அதில், “என்னோட குருநாதர் வைரமுத்து. எனக்கு அவர் தான் வழிகாட்டி... அவர் மேல் இப்போது ஒரு பெண் புகார் கொடுத்து வைரலாக போகுது. போகட்டுமே இப்போ என்ன ஆகிவிடும்.
வைரமுத்து அவர்கள், நகைக் கடையில் திருடினார் என்றால் தானே அவருக்கு அசிங்கம். ஒரு பொம்பளை பிள்ளையைத் தானே கூப்பிட்டாறு. கூப்பிட்டுப் போகிறார். ஆம்பிளை தானே அவர். இதில் என்ன தப்பு. உனக்கு இஷ்டம் இருந்தா போ இஷ்டம் இல்லையென்றால் பத்திரிக்கையில் சொல்கிறார். சொல்லிட்டு போ. அவர் ஒரு ஆம்பிளை தானே அவருக்கும் ஹார்மோன்ஸ் இருக்கும் இல்லையா, ஒரு பொம்பளை பிள்ளையை கட்டிப் புடிச்சி படுக்கணும் தோணும் இல்லையா. அதான் கூப்பிட்டிருக்கிறார். அந்த பொம்பளை வெளியே சொல்லிவிட்டாள். அதைக் கவிஞர் தாங்கித்தான் ஆகவேண்டும். இன்னும் 3 அல்லது 4 நாள் கழித்து மறந்து போகும்.
ரோட்டில் போகும்போது காருக்கு நடுவே ஒரு நாய் வரும். உடனே பிரேக் போடுகிறோம். பின்னால் வரும் வண்டி இடிக்கும். உடனே வண்டிக்கும் நாய்க்கும் சாரி சொல்லிட்டு போவது இல்லையா? அது போல் தான் இதுவும்.”
இவரின் இந்த கருத்துக்கு சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.