Advertisment

‘நல்ல அண்ணன்... வருத்தமா இருக்கு...’மாரிமுத்து மறைவுக்கு நடிகை தீபா, எஸ்.ஜே சூர்யா, சூரி அஞ்சலி

மாரிமுத்து மறைவுக்கு தமிழ் சினிமா நடிகர்கள், பிரபலங்கள் என பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, நேரில் சென்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

author-image
WebDesk
New Update
Marimuthu 2

மாரிமுத்து மறைவுக்கு தமிழ் சினிமா நடிகர்கள், பிரபலங்கள் நேரில் அஞ்சலி

இயக்குனர், நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் வெள்ளிக்கிழமை காலமானார். அவருடைய மறைவு தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Advertisment

கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய இரண்டு படங்களின் இயக்குனராக அறியப்பட்ட இயக்குனர் மாரிமுத்து நடிக்கத் தொடங்கிய பிறகு மிகவும் பிரபலமானார். பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்து கவனம் பெற்றார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில் நடித்து கவனம் பெற்றார்.

இந்நிலையில் இயக்குனர், நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் வெள்ளிக்கிழமை காலமானார். அவருடைய மறைவு தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மாரிமுத்து மறைவுக்கு தமிழ் சினிமா நடிகர்கள், பிரபலங்கள் என பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் பலரும் நேரில் சென்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மாரிமுத்து மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகை தீபா கூறியதாவது: “நானும் அண்ணனும் 4-5 படங்களில் நடித்திருக்கிறோம். கடைக்குட்டி சிங்கம் படம்தான் என்னுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொடுத்தது என்று நான் நிறைய நேர்காணலில் சொல்லியிருக்கிறேன். அந்த படத்துல எனக்கு ஜோடியாக நடித்தது அண்ணன்தான். அதற்கு பிறகு, நாங்கள் நடித்த எல்லா படத்திலும் அண்ணன் ஜாலியாகவும் பேசுவார் அதே சமயத்தில், எப்படி நடந்துக்கனும், எப்படி நடிக்கனும் என்று எல்லாம் சொல்லிக் கொடுப்பார். அவர் கூட நடிப்பவர்களுக்கு நடிக்க சொல்லிக் கொடுப்பார். இப்பதான் சங்கரன்கோயிலில் நானும் அண்ணாவும் நடித்துவிட்டு வந்தோம். அங்கிருந்து வந்து நேற்று வீட்டில் இருந்தேன். இன்றைக்கு இப்படி ஒரு செய்தி (மாரிமுத்து மரணச் செய்தி) வந்துவிட்டது.  என்னால அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 

அண்ணன் எப்போதுமே உடம்பை நல்லா வச்சுக்கமா,  உனக்கு 40 வயசு ஆகியிடுச்சு, உடம்பை ஆரோக்கியமா வச்சுக்கமா கவனமாக இருந்துக்குமா என்று சொல்வார். எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நடிக்கிறது மட்டும் இல்லை சம்பளத்தை வாங்கிவிடுமா, இல்லையென்றால் கிடைக்காது என்று கூறுவார். ஒரு நல்ல அண்ணன், அவர் மறைவு வருத்தமா இருக்கு” என்று மனம் உடைந்து சோகத்துடன் கூறினார்.

மாரிமுத்து மறைவுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், நடிகர் கணேஷ் கூறியதாவது: “அவர் ஒரு அற்புதமான கலைஞரை பார்க்க முடியாது. அவ்வளவு கூலாக இருப்பார். கடைசியாக குருவிக்காரன் என்று ஒரு படத்தில் அவர் ஒரு நல்ல காதாபாத்திரம் செய்கிறர். அவருடன் நடிக்கிற பாக்கியம் கிடைச்சது. என்ன ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் கூல் செய்வார். அவர் ஒரு மிகப் பெரிய கலைஞர். அந்த படத்தில் எம்.எல்.ஏ-வாக ஒரு பிரமாதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நிறைய பேர் எதிர் நீச்சல் சீரியலில் அவருடைய ரசிகர்கள். எங்க வீட்ல மட்டும் அல்ல தமிழகத்தில் எல்லோருடைய வீடுகளிலும் ரேஷன் கார்டுகளில் சேர்க்கப்படாத ஒரு பெயர் மாரிமுத்து. அவர் இன்று நம்மை விட்டு போய்விட்டார்.” என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

அதே போல, மாரிமுத்துவின் உடலுக்கு இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா, நடிகர் சூரி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

marimuthu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment