தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தமன், தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், இவர் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான 'பாய்ஸ்' படத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதற்கு பிறகு தற்போது தான் அதாவது சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி என்கிற படத்தில் தமன் நடிக்கிறார். இந்நிலையில், திருமணம் பற்றி இவர் கூறி இருக்கும் கருத்து ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருமணம் குறித்து அவர் கூறுகையில்,
”திருமணம் செய்து கொள் என்று நான் யாருக்கும் பரிந்துரைப்பதில்லை. ஏனென்றால், திருமணத்தை காப்பாற்றுவது தற்போது கடினமாகிக் கொண்டே வருகிறது.
இன்றைய பெண்கள் யாரையும் சார்ந்திராமல் சுதந்திரமாக இருக்க விரும்புவதே அதற்கு காரணம்” என்று கூறினார். இசையமைப்பாளர் தமனின் இந்தக் கருத்து பெரும் சர்சையைக் கிளப்பியுள்ளது