/indian-express-tamil/media/media_files/2025/09/09/marudhu-mohan-nadigar-sangam-sivaji-ganesan-mgr-tamil-news-2025-09-09-21-55-07.jpg)
"சிவாஜி கணேசன் கொடுத்த தானத்தின் மதிப்பு ரூ.310 கோடி" என்று எழுத்தாளர் முனைவர் கா.வெ.சே மருது மோகன் கூறியுள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தன் நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர். அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை சிவாஜி கணேசன் என்றால் தெரியாத ஆளே இருக்க முடியாது. அந்த அளவிற்கு பல தசாப்தங்களாக மக்கள் மனதை ஆட்சி வருகிறார். இந்நிலையில், நடிகர் சிவாஜி கணேசன் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை எழுத்தாளர் முனைவர் கா.வெ.சே மருது மோகன், வாவ் தமிழா மீடியாவிற்கு பகிர்ந்துள்ளார்.
அவர் பேசியதாவது, “தானமும், தர்மமும் தனிப்பட்ட மனிதர்குள் இருக்க வேண்டும் அதை வைத்து நான் விளம்பரம் தேடமாட்டேன் என்று சிவாஜி கணேசன் கூறியுள்ளார். புயல் அடித்த போது காமராஜரிடம் ஒரு லட்சம் பேருக்கு சிவாஜி கணேசன் உணவளித்துள்ளார். 800 மூடை அரிசி கொடுத்துள்ளார். சத்துணவு திட்டத்திற்கு முதலில் நன்கொடை கொடுத்தது நடிகர் சிவாஜி கணேசன் தான். லால் பகதூர் சாஸ்திரி, பாகிஸ்தான் போருக்காக ஒவ்வொரு மாநிலத்திலும் உதவித்தொகை வாங்கினார். அப்போது சிவாஜி, கன்னட படத்தில் நடித்ததற்காக சம்பளமாக கிடைத்த தங்க பேனாவை நன்கொடையாக வழங்கினார். அப்போது உடன் சென்றிருந்த கமலாம்மா அவர் போட்டிருந்த 400 சவரன் தங்க நகையை கழற்றி கொடுத்தார்.
வெளியில் சிவாஜி கணேசன் யாருக்கும் எதுவும் செய்ததில்லை என்று கூறுவதால் அவர் கொடுத்ததை உலகிற்கு தெரிவிக்கவே ஒரு ஆய்வு மேற்கொண்டேன். அப்போது தான், சிவாஜி கணேசன் கொடுத்த தானத்தின் மதிப்பு ரூ.310 கோடி எனத் தெரிந்தது. இலங்கையில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் தமிழ் படம் ‘ பராசக்தி’ தான். இலங்கைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த நிலையில் அங்கிருந்து மருத்துவமனையை கட்டிதரும்படி சிலர் வந்தனர். அப்போது அந்த மருத்துவமனைக்காக ரூ.25,000 கொடுத்தார்.
சிவாஜி கணேசனுக்கு பிடித்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன் . அதை வைத்து நாடகம் நடத்துகிறார். அந்த நாடகத்தை 112 தடவை அரங்கேற்றம் செய்து முடித்த பின் அதனை போதும் என்று நிறுத்தினார். அதில் கிடைத்த வருமானத்தை தன் உடன் நடித்தவர்களுக்கு கொடுக்க சொன்னார். பின்னர் அவருக்கான சம்பளமான ரூ.32 லட்சத்தை தான் எடுத்துக் கொள்ளாமல் காமராஜரிடம் கொடுத்து தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் என்ன குறைகள் இருக்கிறதோ வாங்கி கொடுக்க சொல்லி கொடுத்தார்.
நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்காக சிவாஜி கணேசனை தலைவராக இருக்க சொல்லி எம்.ஜி.ஆர். கூறியுள்ளார். சிவாஜி தலைவராக வந்த உடன் வங்கியில் கடன் வாங்கி கட்டிடத்தை கட்டியுள்ளனர். அப்போது சிவாஜி கணேசன், நடிகர் சங்க கட்டடத்தின் கடனை அடைக்கும் வைரை தேர்தல் நடத்த வேண்டாம் என்று எம்.ஜி.ஆரிடம் கூறுமாறு வி.கே.ராமசாமியிடம் கூறியுள்ளார்.
ஆனால், எம்.ஜி.ஆர். தேர்தலை நடத்தியுள்ளார். அப்போது நடிகர் சங்க கடனை எப்படி அடைப்பது என்று கேட்ட போது சிவாஜியை நாடகம் நடிக்க சொன்னார் எம்.ஜி.ஆர். அப்படி வசூலான பணம் ரூ.1 கோடியே 85 லட்சம் வந்துள்ளது. அதனை வி.கே.ராமசாமி எம்.ஜி.ஆரிடம் கொடுத்துள்ளார். பின்னர் நடிகர் சங்க கடன் இருக்கிறது என்று கூறியுள்ளார். அதற்கு சிவாஜி ஏன் கவலைப்படுகிறார் வர தலைவர்கள் கட்டிக்கொள்வார்கள் என்று எம்.ஜி.ஆர். கூறினார். இதன் மூலம் தான் நடிகர் சங்க கடன் அதிகமானது. இதையடுத்து சிவாஜி ஒதுங்கிவிட்டார்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.