/indian-express-tamil/media/media_files/2025/09/09/screenshot-2025-09-09-191742-2025-09-09-19-18-04.jpg)
தேவர் மகனைப் போலச் சர்ச்சைகளையும் பாராட்டுகளையும் ஒருசேர அதிகம் சம்பாதித்த இன்னொரு தமிழ்த் திரைப்படம் இருக்குமா என்று தெரியவில்லை. ‘தமிழ் சினிமாவில் மிக மிக நேர்த்தியாக எழுதப்பட்ட திரைக்கதைகளுள் முக்கியமானது தேவர் மகன்’ என்று அடிக்கடி பாராட்டுபவர் இயக்குநர் மிஷ்கின். பல இளம் இயக்குநர்களுக்குக் கூட இந்தப் படத்தின் திரைக்கதை ஒரு முக்கியமான பாடமாக இருக்கிறது.
இதன் மறுபுறத்தில் இதன் மீதான விமர்சனங்களும் கடுமையாக இருக்கின்றன. தென்மாவட்டங்களில் சாதிய வன்முறைகள் நிகழ்ந்ததற்கு ‘தேவர் மகன்’ ஒரு முக்கிய காரணியாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. சாதியப் பெருமிதத்தைப் பேசிய படம், தமிழ் சினிமாவில் அரிவாள் கலாசாரத்தைத் துவக்கி வைத்த படம் என்றெல்லாம் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
தூவலூர் என்கிற கிராமம். அங்குள்ள இரண்டு பங்காளிக் குடும்பங்களுக்கு இடையே நீண்ட கால பரம்பரை விரோதம். மூத்தவரான பெரிய தேவர் சாதிப் பெருமிதம் கொண்டிருந்தாலும் ஊர் நலனைப் பிரதானமாக எண்ணுபவர். சாதிப் பாரபட்சமில்லாமல் மக்களை அணுகுகிறவர். ஆனால் இளையவரான சின்னச்சாமி தேவர் இதற்கு நேரெதிர். அண்ணன் மீதுள்ள பகைதான் இவருக்கு முக்கியம். இவரது மகனான மாயன், தந்தையை விடவும் சாதிய வெறி அதிகம் கொண்டவன். சாதியப் பெருமிதத்திற்காகவும் பங்காளிப் பகைக்காகவும் எந்த அழிவையும் செய்யத் துணிபவன்.
பெரிய தேவரின் மகன் சக்திவேல். லண்டனில் படித்து விட்டு தற்காலிகமாகத் தங்கும் நோக்கில் கிராமத்திற்கு வருகிறான். தனது காதலியைத் தந்தையிடம் அறிமுகப்படுத்தி திருமணத்திற்குச் சம்மதம் வாங்கி விட்டு அங்கிருந்து உடனே கிளம்பி விடுவதுதான் அவனது திட்டம். பெருநகரத்தில் தொடர் உணவகம் அமைக்கும் கனவுடன் இருக்கிறான். கிராமத்தில் நிகழும் சாதிய வன்முறைகளைக் கட்டோடு வெறுக்கிறான்.
பெரிய தேவர், தன் பிறகு ஊரை பாதுகாப்பார் என்ற நம்பிக்கையுடன்息 செல்லும் மகன் சக்திவேலின் காதல் அவருக்கு ஏமாற்றமாக இருக்கிறது. சக்திவேல் ஊரை விட்டு செல்லும் நேரத்தில் சாதிய அடிப்படையிலான வன்முறை வெடிக்கிறது; மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். பஞ்சாயத்தில் நிகழும் அவமதிப்பால் பெரிய தேவர் மரணிக்கிறார். தந்தையின் கனவுகளை நிறைவேற்றும் பொருட்டு ஊரில் தங்கி சேவை செய்யும் சக்திவேலை, மாயன் எதிர்த்து, அழிவுக்கான செயலை தீவிரமாக செய்கிறான்.
இந்த படத்தை பற்றி இன்று கூட பேசாத இயக்குனர்கள் இல்லை. அவ்வளவு துல்லியமாக யோசித்து இயக்கிய மற்றும் உலகநாயகன் நடித்த படம் இது. இதை பற்றி மருது மோகன் அவர்கள் ஒரு நேர்காணலில் பேசுகையில், "கமல் சென்று இது போல கதை எழுதியிருக்கிறேன் என்று சிவாஜி அவர்களிடம் கூறினார். அதற்க்கு அவர் வேண்டாம் விடு நான் நடிக்கவில்லை என்று கூறிவிட்டார். உடனே கமல் நீங்கள் நடிக்கவில்லை என்றால் இந்த அக்கதையை நான் எடுக்க மாட்டேன் என்று கூறினார். உடனே பிரபு மற்றும் ராம்குமார் அனைவரும் சேர்த்து சொன்னவுடன் அவர் நடிக்க ஒற்றுக்கொண்டார்.
அவர் ஒற்றுக்கொண்டவுடன், சிவாஜிக்கு மீசை வைக்க வேண்டும் என்று கூறினார். காமலுடைய ஐடியா தான் அந்த மீசை. அவ்வப்போது அவரே வந்து ட்ரிம் செய்து விடுவார். இந்த மீசையுடன் யாருக்கும் போஸ் கொடுக்க வேண்டாம் என்றும் கூறினார். இதை தாண்டி கமல் அவர்கள் சிவாஜியிடம் வெறும் 7 நாட்கள் மட்டுமே கால் சீட் வாங்கி அவரது கதாபாத்திரத்தை சுட செய்து முடித்துள்ளார்." என்று ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.