/indian-express-tamil/media/media_files/2025/09/14/sivaji-2025-09-14-12-29-23.jpg)
என்கிட்ட சொன்ன கதை, எப்படி எம்.ஜி.ஆர் நடிச்சார்? இனிமே உனக்கு வாய்ப்பு இல்ல போ: கதாசிரியரை துரத்திய சிவாஜி!
1966-ஆம் ஆண்டு இயக்குநர் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான ‘பெற்றால்தான் பிள்ளையா’ திரைப்படம் எம்.ஜி.ஆரின் தோற்றத்தையை மாற்றியது. எம்.ஜி.ஆர் இப்படியும் நடிப்பாரா என்று பேசும் அளவிற்கு பெரும் வெற்றிப் படமாக மாறியது. ஆனால், இந்த கதை முதலில் நடிகர் சிவாஜிக்கு தான் சொல்லப்பட்டுள்ளது. அது எப்படி எம்.ஜி.ஆரிடம் சென்றது என்பது குறித்த தகவலை கா.வெ.சே மருது மோகன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது, ”கோபம் வந்தால் கடுமையாக திட்டுவார். அப்பறம் ஏன் நான் திட்டுனேன் தெரியுமா என்று விளக்கம் கொடுப்பார். ஆரூர் தாஸின் ‘பெற்றால் தான் பிள்ளையா’ படத்தின் கதை முதலில் சிவாஜியிடம் தான் சொல்லப்பட்டது. சிவாஜி என் தம்பியிடம் கதையை கூறு என்று ஆரூர் தாஸிடம் சொல்லிவிட்டு சென்றுள்ளார். எதோ ஒரு காரணத்தினால் காலம் கடந்துவிட்டது.
ஆரூர் தாஸிற்கு கொஞ்சம் பணத் தேவை இருந்ததால் எம்.ஜி.ஆரிடம் இந்த கதையை கூறியிருக்கிறார். எம்.ஜி.ஆருக்கு இந்த கதை பிடித்திருந்ததால் நான் நடிக்கிறேன் என்று ஒரு 5000 ரூபாய் கொடுத்திருக்கிறார். இவர் கதைக்குதான் கொடுக்கிறார் என்று நினைத்துள்ளார். ஆனால், எம்.ஜி.ஆர் இது கதைக்கு அல்ல எனக்கு பிடித்திருக்கிறது அதனால் கொடுக்கிறேன். கதைக்கு அண்ணன் எம்.ஆர்.ராதாவிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளார்.
ஆரூர் தாஸ், எம்.ஆர்.ராதாவிடம் சென்றபோது அவர் எம்.ஜி.ஆர் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டாரா அப்ப கதையை குடு என்று சொல்லிவிட்டு பணத்தை கொடுத்துள்ளார். இந்த படம் எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்த பிறகு சிவாஜியிடம் பலரும் படம் நன்றாக இருக்கிறது என்று கூறியுள்ளனர். சிவாஜி அந்த படத்தின் கதையை கேட்டதும் இந்த கதையை தானே ஆரூஸ் தாஸ் நம்மிடம் கூறினார் என்று நினைத்துள்ளார்.
ஒரு நாள் ஸ்டூடியோவில் ஆரூர் தாஸை சிவாஜி பார்த்துள்ளார். அப்போது இந்த கதையை என்னிடம் தானே முதலில் சொன்னாய். எம்.ஜி.ஆரிடம் சொல்ல போகும் போது என்னிடம் சொல்லிட்டு போய் இருக்கணும் இல்லையா. ஏன் அங்க போய் சொன்ன. இனிமேல் என் படத்திற்கு நீ வசனம் எழுத வேண்டும் என யாரிடமும் நான் சொல்லமாட்டேன். அதேபோல் எதாவது தயாரிப்பாளர் ஆரூர் தாஸ் தான் வசனம் எழுத வேண்டும் என்று சொன்னால் அதை நான் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன் என்று சிவாஜி கூறியுள்ளார்.
இதை கேட்ட ஆரூர் தாஸ் அழுது கொண்டே சென்றுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சிவாஜி, ஆரூர் தாஸை பார்த்து என்னடா உன்னை ரொம்ப நாளாக பார்க்க முடியவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் நீங்க தான் என்னை திட்டிட்டீங்களே என்று சொல்லியுள்ளார். அதற்கு சிவாஜி நான் உன் அண்ணன் மாதிரி நான் உன்னை திட்டக்கூடாதா? இதலாம் ஏன் மனதில் வைத்துக்கொள்கிறாய் என்று பேசினார்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.