மாஸ்டர் தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகும்; படக்குழு உறுதி

தீபாவளிக்கு மாஸ்டர் படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு, திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அரசு அனுமதி அளிக்கும் போது படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

master movie leak master scenes
master movie leak master scenes

மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகும் என்று படக்குழு உறுதிபடுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட நம்பத்தகுந்த ஒடிடி தளம் ஒன்று விருப்பம் தெரிவித்திருந்தாலும், மாஸ்டர் திரைப்பட்டத்தை தியேட்டரில் வெளியிடவே நாங்கள் விரும்புகிறோம். தமிழ் சினிமாத் துறையை மீட்டெடுக்க திரைப்பட உரிமையாளர்கள் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. கோடைகால விடுமுறைக்கு வெளியாக வேண்டிய இந்தப் படம் கொரோனா, பெருந்தொற்றால் ரிலீஸாகாமல் போனது.

கோயம்பேடு சந்தைக்கு நாளை விடுமுறை: அதிர்ச்சி தந்த காய்கறிகள் விலை!

பல மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை படக்குழு மறுத்தது. இதற்கிடையே கடந்த 10-ம் தேதி திரையரங்குகள் திறக்கப்பட்டன. ஆனால் 50% இருக்கைகள் நிரம்புவதற்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீபாவளிக்கு மாஸ்டர் படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு, திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அரசு அனுமதி அளிக்கும் போது படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் பொங்கலுக்கு படம் வெளியாகும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் விலைக்கு வாங்கியிதாக கூறப்பட்டது.

இதனால் படம் ஓடிடி-யில் வெளியாகிறதா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இதனை தயாரிப்பாளர் மறுத்துள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Master movie bagged by ott thalapathy vijay

Next Story
இசைப் பள்ளிக்கு எஸ்.பி.பி பெயர்: ஆந்திர அரசு அறிவிப்புSinger SP Balasubrahmanyam, Tamil Cinema News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express