பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் திரைப்படங்கள் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளில் 50% ரசிகர்கள் தான் அனுமதிக்கப்பட வேண்டும் என மத்திய அரசு கண்டிப்புடன் தெரிவித்திருந்தது.அதன்படி தமிழக அரசு சில வழி காட்டுதல்களையும் வழங்கி இருந்தது.
இந்நிலையில் நேற்று காலை மாஸ்டர் திரைப்படம் சென்னை நகரில் உள்ள முக்கிய திரையரங்குகளில் வெளியானது. இதற்கு ரசிகர்களும் பெரிய வரவேற்பை கொடுத்தனர். திரையரங்குகளின் முன் திருவிழா கூட்டம் போல் கூடி இருந்தனர் . அதோடு மேளதாளங்களோடு ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் படம் வெளியான குரோம்பேட்டை, கீழ்பாக்கம், வண்ணாரப்பேட்டை, வில்லிவாக்கம் போன்ற முக்கிய இடங்களில் உள்ள திரையரங்குகளை காவல்துறையினர் விசிட் செய்துள்ளனர். அப்போது 50% இருக்கை விதியை திரையரங்குகள் பின்பற்றவில்லை என தெரிய வந்துள்ளது. எனவே காசி திரையரங்கம் உள்ளிட்ட10 திரையரங்குகள் மீதும், திரையரங்க மேலாளர்கள் மீதும் இந்திய சட்டம் 188 மற்றும் 269 கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதோடு ரூபாய் 5000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"