Master Release Highlights: விஜய்க்காக குவிந்த ஃபேமிலி ஆடியன்ஸ்

Master Tamil Movie Review: மாஸ்டர் படத்தின் சில காட்சிகள் திருட்டுத்தனமாக இணையதளத்தில் திங்கட்கிழமை லீக் ஆனது. அவற்றை ரசிகர்கள் பகிர வேண்டாம்...

By: Jan 13, 2021, 8:01:46 PM

Actor Vijay’s Master Tamil Movie Review Live Updates: தமிழ்த் திரை வரலாற்றில் மாஸ்டர், மிக முக்கியமான படம். சினிமா உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, வெள்ளித் திரையைத் தொடும் பெரிய படம் இது. ஓடிடி தளங்கள் நல்ல விலை கொடுக்க பேச்சுவார்த்தை நடத்தியும், மறுத்தார் நடிகர் விஜய். அவர் தனது ரசிகர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காலத்திற்கும் பறைசாற்றும் இந்தப் படம். வெளிநாடுகளில் இந்திய நேரப்படி அதிகாலையில் படம் ரிலீஸ் ஆனது. படம் குறித்து ரசிகர்கள் பாசிட்டிவான கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எக்ஸ்.பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி வில்லனாக வருவது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. மாளவிகா மோகனன், சாந்தனு பாக்கியராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்ட நட்சத்திரங்கள் படத்தில் இடம் பெற்றுள்ளனர்.

Master Tamil Movie Release Live Updates: மாஸ்டர் மூவி

2020 ஆகஸ்டில் வெளியாகி இருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா பெருந்தொற்றால், பொங்கல் வெளியீடாக 2021 ஜனவரி 13-ல் வெளியாகிறது. இந்தியில் ஜனவரி 14-ல் ரிலீஸ் ஆகிறது. விஜய் ரசிகர்கள் இந்தப் படத்திற்காக வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். தியேட்டர் புக்கிங் சில மணி நேரங்களில் ஃபுல் ஆனது.

மாஸ்டர் படத்தின் சில காட்சிகள் திருட்டுத்தனமாக இணையதளத்தில் திங்கட்கிழமை லீக் ஆனது. அவற்றை ரசிகர்கள் பகிர வேண்டாம் என தயாரிப்பாளர் தரப்பிலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சார்பிலும் வேண்டுகோள் விடப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

Live Blog
Master Movie Release: மாஸ்டர் படத்தின் சில காட்சிகள் திருட்டுத்தனமாக இணையதளத்தில் திங்கட்கிழமை லீக் ஆனது. அவற்றை ரசிகர்கள் பகிர வேண்டாம்...
12:21 (IST)13 Jan 2021
ஃபேமலி ஆடியன்ஸ் !

சென்னையில் அதிகாலை முதலே திரண்ட ஃபேமலி ஆடியன்ஸ்.

10:46 (IST)13 Jan 2021
இயக்குனர் சுசீந்திரன் மாஸ்டருக்கு வாழ்த்து!
10:45 (IST)13 Jan 2021
அஜித் ரசிகர்கள் கொண்டாடும் மாஸ்டர்!

மாஸ்டர் திரைப்படத்தை அஜித் ரசிகர்களும் ஒருபக்கம் கொண்டாடி வருகின்றனர். 

09:35 (IST)13 Jan 2021
மாஸ்டர் பொங்கல்!

நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சஞ்சீவின் மாஸ்டர் பொங்கல் வீடியோ 

09:25 (IST)13 Jan 2021
வில்லன் புகழ் பாடும் மாஸ்டர் :

மாஸ்டர் படத்தில் வில்லன் ரோலில் விஜய் சேதுபதிக்கு அடுத்த வகையில் அதிகம் பேசப்படும் நபராக அர்ஜூன் தாஸ் இருக்கிறார். அவரின் கதாபாத்திரத்தை பற்றி திரைப்பட விமர்சகர்கள்,  நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். 

09:00 (IST)13 Jan 2021
ரசிகர்களுடன் படக்குழு!

மாஸ்டர் திரைப்படத்தின் முதல்நாள் காட்சியில், மாஸ்டர் படக்குழு ரசிகர்கள் உடன் சேர்ந்து படம் பார்த்து மகிழ்ந்தனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர்  அனிரூத், நடிகை மாளவிகா மோகன் என அனைவரும் ஒருசேர மாஸ்டர் திரைப்படத்தை ரசிகர்கள் உடன் பார்த்து மகிழ்ந்தனர்.  

08:22 (IST)13 Jan 2021
அதிரும் அரங்கம்!

விஜய்யின் மாஸ்டர் ரீலிஸ் அரங்கத்தில் தெறிக்கிறது.  முதல்நாள் சிறப்பு காட்கசிகளை கண்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

18:24 (IST)12 Jan 2021
மாஸ்டர் படத்தின் அதிகாரபூர்வ டீசர்

மாஸ்டர் படத்தின் அதிகாரபூர்வ டீசர் இது. உலகம் முழுவதும் தளபதி விஜய் ரசிகர்கள் ஆதரவைப் பெற்று பட்டையைக் கிளப்பிய டீசர் இது...

18:20 (IST)12 Jan 2021
விஜய் சார் ரசிகர்களும் மக்களும் உங்களுடன் இருக்கிறார்கள்.- எஸ்.ஜே.சூர்யா

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பதிவில், ‘கவலைப்பட வேண்டாம் இயக்குனர் (லோகேஷ் கனகராஜ்) சார்... கடவுள் உங்களுடன் இருக்கிறார். விஜய் சார் ரசிகர்களும் மக்களும் உங்களுடன் இருக்கிறார்கள். மாஸ்டர் படத்தின் பெரிய வெற்றியால் நமது திரையுலகம், தன்னை மறு தொடக்கம் செய்து கொள்ளப் போகிறது’ என குறிப்பிட்டிருக்கிறார்.

Master Tamil Movie Review Live: இந்தப் படத்தை பைரசி வெப்சைட்கள் வெளியிட தடை கேட்டு சில தினங்களுக்கு முன்பே படத் தயாரிப்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் சுமார் 400 வெப்சைட்களுக்கு இந்தப் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

லீக் ஆன இந்தப் படக் காட்சிகளை இணையதளங்களில் பகிர வேண்டாம் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட கருத்துக்கு இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா, நடிகர் அருண் விஜய், நடிகை மஞ்சிமா மோகன் உள்பட பலர் ஆதரவு தெரிவித்து கருத்து பகிர்ந்து வருகிறார்கள்.

Web Title:Master movie release live updates actor vijay master tamil movie reactions

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X