master movie vijay master vijay sethupathi : மாஸ்டர் ஒருவரி விமர்சனம். லோகேஷ் கனகராஜ் படம் என்பதை விட விஜய் படமாக இருந்தாலும் மாஸ் ஹீரோவை வைத்து கமர்ஷியல் படம் கொடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர்.
Advertisment
படம் முழுக்க நம்முடன் வருவது ஜேடி (விஜய்) பவானி (விஜய் சேதுபதி). இவர்கள் தான்.. இவர்களுக்கு தான்.. இவர்கள் மட்டும் தான் எனலாம். அந்த அளவுக்கு இருவரின் கதாபாத்திரம் ஆன் ஸ்கீரினில் அனல் தெறிக்கிறது. குறிப்பாக ரசிக்கும்படியான வில்லன் பாத்திரம் தமிழ் சினிமாவுக்கு புதியதில்லை. ஆனாலும் தான் வழி தனி வழி என கலக்குகிறார் பவானி.
விஜய், விஜய் சேதுபதியின் நடிப்பு தான் படத்தை தாங்கிப் பிடிக்கிறது.எதார்த்த நடிப்பு பவானியின் கொடூர குணத்தை மேம்படுத்திக் காட்டுகிறது. ரசிகர்களையும் கட்டி போடுகிறது.
முன்னனி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நேரத்தில், இப்படி வில்லன் பாத்திரத்தை தேர்வு செய்து நடிப்பதில் சற்றும் யோசிக்காமல் அதிலும் முழு வெற்றியும் கண்டுள்ளார் விஜய் சேதுபதி. இதுதான் இவரின் வெற்றி ரகசியமோ.. இருக்கலாம்.
விஜய் இதில் மிகவும் ஸ்டைலிஷாக வருகிறார். அவரின் 'ஸ்வேக்' படம் முழுவதும் பரவசப்படுத்துகிறது. மற்ற படங்களை காட்டிலும் இதில் அவர் இயல்பான மனிதராகவே பல காட்சிகளில் தென்படுகிறார். அது விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் பிடிக்கும் விதமாகவே அமைந்துள்ளது.
எப்போதும்போல் விஜய் சேதுபதியின் குறும்பு கலந்த வில்லத்தனமும் விஜய் ரசிகர்களையும் கூட கவர்வது போல உள்ளது. குறிப்பாக விஜய்யும் விஜய் சேதுபதியும் சந்தித்துக்கொள்ளும் காட்சி 'பக்கா மாஸ்' என்று சொல்லத்தக்கது. மொத்தத்தில் விஜய், விஜய் சேதுபதி இருவரும் சேர்ந்து கொடுத்த பொங்கல் ட்ரீட் தான் இந்த மாஸ்டர்.. இருவரும் மாஸ்டர்ஸ் தான் நடிப்பில்.