Quit Pannuda: நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குயிட் பண்ணுடா என்ற பாடலை அப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாளில் வெளியிடப்பட்டுள்ளது. மாஸ்டர் படத்தின் குயிட் பண்ணுடா பாடலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்குக் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு இசை அனிருத். கோடைகால ஸ்பெஷலாக ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய இந்தப்படம், கொரோனா லாக்டவுன் காரணமாக இன்னும் வெளியாகவில்லை. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
’மேக்கப் போடுறதுனா கொள்ளை இஷ்டம்’ வில்லி நடிகை நிவிஷா!
What a bday gift from dearest team #Master 🙂 #QuitPannuda pic.twitter.com/ED37yK1MZZ
— Anirudh Ravichander (@anirudhofficial) October 15, 2020
இதற்கிடையே லாக்டவுனுக்கு முன்பே மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்து, பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு ‘குயிட் பண்ணுடா’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிடுவதாக மாஸ்டர் படக்குழு அறிவித்துள்ளது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குயிட் பண்ணுடா பாடல் என்ற பாடல் வெளியாகி உள்ளது. மாஸ்டர் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில், மாஸ்டர் படத்தில் இருந்து குயிட் பண்ணுடா பாடல் வெளியானதையடுத்து, விஜய் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் டிரெண்டிங் செய்து கொண்டாடி வருகின்றனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”