/tamil-ie/media/media_files/uploads/2020/03/Master-2nd-Single-Thalapathy-Vijay.jpg)
thalapathy vijay, master second single, vaathi is coming
Master, Vaathi is Coming Single : ஊரெல்லாம் தற்போது கொரோனாவில் (ஃபீவர்) சிக்கித் தவிக்க, விஜய் ரசிகர்களோ ‘மாஸ்டர்’ ஃபீவரை என்ஜாய் செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆம்! ‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், நடித்து வரும் திரைப்படம் தான் ‘மாஸ்டர்’. தளபதியின் 64-வது படமான இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘கத்தி’ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார் அனிருத். எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரலில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் படத்தின் ஆடியோ லாஞ்ச் வரும் மார்ச் 15-ம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், இதன் இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று வெளியாகியுள்ளது.
Live Blog
Vaathi is Coming - Master Second Single release Live Updates
தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தொடர்பான அனைத்து செய்திகளையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
பாடல் சிறப்பாக இருப்பதாக மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.
On fire and how! @anirudhofficial amazing! 👏🏻 🔥 #MasterSecondSingle#VaathiCominghttps://t.co/jTJkoFCAUD
— malavika mohanan (@MalavikaM_) March 10, 2020
’லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா, ஆல்வேஸ் பி ஹேப்பி’ என ரெய்னாவும், முரளி விஜய்யும் இருக்கும் படத்தைப் பதிவிட்டு, சி.எஸ்.கே-வின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்த வரிகளுடன், அதனை ரீ ட்வீட் செய்திருக்கிறது மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி ஃப்லிம் கிரியேட்டர்ஸ்
Friends ah ninna, powerful maapi. Konjam chill pannu baby! @chennaiipl#Master#MasterKuWhistlePoduhttps://t.co/Pg7PYVeCYZ
— XB Film Creators (@XBFilmCreators) March 10, 2020
புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31-ம் தேதி மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டார் விஜய்.
#Masterpic.twitter.com/dNhDc48eDA
— Vijay (@actorvijay) December 31, 2019
மாஸ்டர் படத்தில், டைட்டிலுக்கு ஏற்றவாறு கல்லூரி பேராசிரியராக விஜய் நடிப்பதாக தெரிகிறது. படத்தின் முதல் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடலிலும், மாணவர்களுக்கு அறிவுரை சொல்வது போல இருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று வெளியாகும், செகண்ட் சிங்கிளும் ‘வாத்தி இஸ் கம்மிங்’ எனக் குறிப்பிடப்படுவதால், தளபதியின் கிளாசை கவனிக்க ஆயத்தமாகிவிட்டார்கள் ரசிகர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights