/tamil-ie/media/media_files/uploads/2019/12/New-Project-2019-12-31T192835.795.jpg)
thalapathy 64, master movie, thalapathy vijay 64 master, thalapathy vijay new movie master, vijay 64 first look poster, vijay 64 new movie master, thalapathy 64 update today, vijay64, master movie, தளபதி விஜய் 64 புதிய படம் மாஸ்டர், lokesh kanagaraj twitter, xavier britto twitter, actor vijay twitter
Thalapathy vijay 64 new movie named as master: விஜய்யின் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாஸ்டர் என்று பெயரிடப்பட்டு வெளியாகி ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பைப் பெற்றுவருகிறது. டுவிட்டரில் 1 மில்லியனைத் தாண்டி ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு தற்காலிகமாக முதலில் தளபதி 64 என்று பெயரிடப்பட்டது. இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார் என்று அறிவிக்ப்பட்டது.
இந்த நிலையில், விஜய்யின் தளபதி 64 படத்திற்கு மாஸ்டர் என்று பெயரிடப்பட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே டுவிட்டரில் ட்ரெண்ட் ஆனது. விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் போஸ்டரை பதிவிட்டு ஹேஷ்டேக் மாஸ்டர் என்று டுவிட்டரில் களம் இறங்கியதால் டுவிட்டரே திணறியது.
மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான 2 மணி நேரத்தில் 1 மில்லியன் முறை ஹேஷ்டேக் மாஸ்டர் என பதிவிட்டதால் டுவிட்டரில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கோபமும் சிந்தனையும் உள்ளவராக தலையைக் கோதியபடி அசையும்படியாக அமர்ந்திருக்கிறார். அதோடு அவர் ஒரு வளையத்தை சுற்றிவிட்டு கையில் பிரமீடைசுட்டிக்காட்டும் படியாக தோற்றமளிக்கிறார்.
இந்தப் படத்தின் போஸ்டரில் மற்றொரு சிறப்பம்சம், மாஸ்டர் என்ற டைட்டிலுக்கு மேல் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் என்று விஜய்க்கு இணையாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் பாத்திரம் பேசும்படியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தளபதி 64 மாஸ்டர் என்ற படத்தின் பெயரும் போஸ்டரும் படத்தின் கதையை சொல்லும் விதமாக அமைந்துள்ளது என்று சினிமா ரசிகர்கள் பலரும் இணையத்தில் விவாதித்து வருகின்றனர்.
இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஒரு கல்லூரி பேராசிரியராக நடிப்பதாக ஏற்கெனவே ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் படத்துக்கு மாஸ்டர் என்று பெயரிடப்பட்டதன் மூலம் அது உறுதியாகியுள்ளது. கையில் வளையத்தை சுற்றிவிட்டு பிரமீடை சுட்டிக்காட்டி கோபத்தில் சிந்திப்பவராக அமர்ந்திருக்கும் விஜயின் தோற்றம் ஒரு அதிரடியான ஆக்ஷன் படமாக அமையும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
விஜய்யின் தலைவா, சர்க்கார், பிகில் படங்களை அடுத்து மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவாக 1 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. விஜய்யின் தளபதி 64 மாஸ்டர் படத்தின் போஸ்டர், சில திரையரங்குகளில் திரையிடப்பட்டதால் விஜய் ரசிகர்கள் இப்போதே புத்தாண்டு பிறந்துவிட்டதைப் போல கொண்டாடத் தொடங்கிவிட்டனர். விஜய் ரசிகர்கள் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் மாஸ்டர் படத்தின் போஸ்டரை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். இதன் மூலம், மாஸ்டர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.