/tamil-ie/media/media_files/uploads/2020/10/Thalapathy-Vijay-Master-Teaser.jpg)
விஜய்
தளபதி விஜய்யின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் பட டீஸர் எப்போதும் வரும் என ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இதற்கிடையே படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தனது சமூக ஊடக கைப்பிடியில் இது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். “மாஸ்டர் டீஸர் விரைவில் வரும்” என்ற அந்த பதிவு, சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, விஜய் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இருப்பினும், படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லர் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
#Master Teaser coming soon ???? !!
— Xavier Britto (@XBbritto) October 4, 2020
லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய ஆக்ஷன் த்ரில்லர் படம் தான் மாஸ்டர். இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா ஜெரேமியா, சாந்தனு பாக்யராஜ், நாசர், ஸ்ரீமன், தீனா, ரம்யா சுப்பிரமணியம், சஞ்சீவ், அழகம் பெருமாள், ரமேஷ் திலக், கெளரி ஜி கிஷன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசை அனிருத் ரவிச்சந்தர், ஒளிப்பதிவு சத்யன் சூரியன் மற்றும் எடிட்டிங் பிலோமின் ராஜ். படத்தின் வெளியீடு கொரோனா வைரஸால் தாமதமாகியிருக்கிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us