விஜய் வசனமே இல்லாத மாஸ்டர் டீசர்: ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன?

Thalapathi Vijay Master Tamil Movie Teaser release: விஜய், விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் என்பது படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

By: Nov 15, 2020, 7:14:27 AM

Master Teaser Today : தமிழ் சினிமா உலகின் இன்றைய ஆகப் பெரிய எதிர்பார்ப்பு மாஸ்டர். தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் இது. இயக்கம், லோகேஷ் கனகராஜ். கொரோனா பெருந்தொற்று காரணமாக பட ரிலீஸ் தள்ளிப் போகிறது. எனினும் தனது ரசிகர்கள் திருப்தியே முக்கியம் என நினைக்கும் விஜய் நஷ்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல், தியேட்டர் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.

எனினும் தீபாவளித் திருநாளில் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டாமா? அதற்காகவே தீபாவளி தினத்தன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு படத்தின் டீசர் ரிலீஸுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இதையே ஒரு திரைப்பட ரிலீஸ் அளவுக்கு சமூக வலைதளங்களில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.

.”தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Live Blog
Thalapathi Vijay Master Tamil Movie Teaser release: விஜய், விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் என்பது படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
20:12 (IST)14 Nov 2020
சிறந்த தீபாவளி பரிசு ... மரண மாஸ் - குஷ்பு

சிறந்த தீபாவளி பரிசு ... மரண மாஸ் என்று நடிகை குஷ்பு தெரிவித்தார்.  

19:03 (IST)14 Nov 2020
ஒரு மணி நேரத்தில் 4.84 லட்சம் வியூஸ்; விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

மாஸ்டர் டீசர், யுடியூப்பில் வெளியாகி ஒரு மணி நேரத்தில் 4.84 லட்சம் வியூஸை தாண்டியிருக்கிறது. இதை ரசிகர்கள் டிவிட்டரில் வெளியிட்டு கொண்டாடி வருகிறார்கள்.

18:52 (IST)14 Nov 2020
முக்கால் மணி நேரத்தில் 5 லட்சத்தை நெருங்கும் வியூஸ்

யுடியூப்பில் வெளியாகி முக்கால் மணி நேரத்தில் 4 லட்சத்து 80ஆயிரம் வியூஸை தாண்டியிருக்கிறது மாஸ்டர் டீசர். 24 மணி நேரத்தில் 20 மில்லியன் வியூஸ் என்பதே விஜய் ரசிகர்களின் இலக்கு.

18:47 (IST)14 Nov 2020
சிவகார்த்திகேயன், விவேக் வாழ்த்து

பிரபலங்கள் பலரும் மாஸ்டர் டீசரை புகழ்ந்து வருகிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் விவேக் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவு போட்டிருக்கிறார்கள்.

18:22 (IST)14 Nov 2020
‘தலைவன் பஞ்ச் டயலாக் இல்லையே’ டீசர் ரீயாக்‌ஷன்ஸ்

டீசரில் விஜய்க்கு டயலாக் எதுவுமே இல்லை. விஜய்யின் பஞ்ச் டயலாக் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சின்னதாக ஏமாற்றம்! விஜய் இந்தப் படத்தில் பேராசிரியராக வருவது, டீசரில் உறுதி ஆகிறது.

ஒரே ஒரு குறை; தலைவன் பஞ்ச் டயலாக் இல்லை என ட்விட்டரில் கருத்து கூறுகிறார் மாயோன் என்கிற ரசிகர். பெரும்பாலான ரசிகர்கள் விஜய் டயலாக் இல்லாமல் ஆக்‌ஷன் காட்சிகளாக டீசரில் வெளியிட்டிருப்பது இன்னும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்துவதாக கூறுகிறார்கள்.

17:59 (IST)14 Nov 2020
மாஸ்டர் டீசர் வெளியானது; ரசிகர்கள் உற்சாகம்

மாஸ்டர் டீசர் வெளியானது. டீசர் வெறித்தனமாக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

17:55 (IST)14 Nov 2020
20 மில்லியன் இலக்கு

இன்னும் சற்று நேரத்தில், 6 மணிக்கு மாஸ்டர் டீசர் சன் டிவி யு டியூப் தளத்தில் வெளியாக உள்ளது. இதில் 20 மில்லியன் வியூஸ்களை 24 மணி நேரத்தில் கடக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் இலக்கு வைத்திருக்கிறார்கள்.

17:07 (IST)14 Nov 2020
மாஸ்டர் டீசர், பழைய சாதனைகளை முறியடிக்குமா?

மெர்சல் டீசர் 24 மணி நேரத்தில் 11.4 மில்லியன் வியூஸ், சர்கார் டீசர் 16 மில்லியன் வியூஸ், பிகில் டிரெய்லர் 24 மணி நேரத்தில் 19 மில்லியன் வியூஸ் போனதாக கணக்கு வைத்திருக்கும் ரசிகர்கள், அந்தச் சாதனைகளை மாஸ்டர் டீசர் முறியடிக்கும் என கூறி வருகிறார்கள்.

ட்விட்டரிலும் மாஸ்டர் டீசர் டுடே என்கிற ஆங்கில ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

16:02 (IST)14 Nov 2020
அந்த வசனம்... தியேட்டர் கிழியப் போவுது

மாஸ்டர் படத்தின் ஆடியோ லாஞ்சின்போது வசனகர்த்தா ரத்னகுமார், குறிப்பிட்ட வசனத்திற்கு தியேட்டர் கிழியப் போவுது என குறிப்பிட்டார். அந்த வசனம் டீசரில் இடம் பெறும் என்கிற எதிர்பார்ப்பில், அந்த வசனத்திற்காக காத்திருக்கிறார்கள். இது குறித்து பலரும் ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்கள்.

15:56 (IST)14 Nov 2020
சரியான நேரத்துல சரவெடி

சதீஷ் விஜய் என்கிற ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தளபதி படமே இல்லாத ஒரு வருஷமா 2020 இருக்க போது.
ஆனா அந்த குறைய வர போற டீஸர் தீத்து வைக்கும் ! தியேட்டர்ல டீஸர் -யே படமா கொண்டபோறாங்க பசங்க. சரியான நேரத்துல சரவெடி !’ என கூறியிருக்கிறார். !@Dir_Lokesh நன்றி ப்ரோ’ என கூறியிருக்கிறார்.

15:55 (IST)14 Nov 2020
மரண வெயிட்டிங்- சிபி சத்யராஜ்

விஜய்க்கு நிறைய விஐபி ரசிகர்கள், நட்சத்திர ரசிகர்கள் உண்டு. அவர்களில் ஒருவர், நடிகர் சிபி சத்யராஜ். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மாஸ்டர் டீசர் டுடே என ஹேஷ்டேக் போட்டு, ‘மரண வெயிட்டிங்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

Thalapathi Vijay Master Tamil Movie Teaser release: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் இது. தமிழ் சினிமாவில் மல்டி ஸ்டார் படங்களைப் பார்ப்பது மிகவும் அரிதானது. அதிலும் இன்றைய தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான விஜய், விஜய் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் என்பது படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

ஏப்ரல் 9ம் தேதியே வந்திருக்க வேண்டிய படம், கொரோனா தொற்று காரணமாக 2021-ல்தான் வெளியாகப் போகிறது. மேலும், விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த 'பிகில்' படம் கடந்த தீபாவளிக்குத்தான் வந்தது. ஒரு வருடமாக விஜய்யை திரையில் பார்க்க முடியாமல் அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

அவ்வளவையும் சேர்த்து வைத்து 'மாஸ்டர்' டீசரின் மீது தங்களது வேகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். மாஸ்டர் டீசரை தியேட்டர்களிலும் வெளியிட ஏற்பாடு செய்தது ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷம்

Web Title:Master teaser today live thalapathi vijay master tamil movie teaser release

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X