விஜய் ரசிகர்களுக்கு மெகா #masterupdate: சென்னையை விட்டு வெளியே போயிடாதீங்க!!

முதலில் கோவையில் ஆடியோ லான்ச் திட்டமிட்டிருந்த நிலையில், அங்கு எந்த கல்லூரியிலும் அனுமதி கிடைக்கவில்லை. பிறகு, புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றில் நடத்தலாம் என்ற முயன்ற போதும் அனுமதி கிடைக்கவில்லையாம்

முதலில் கோவையில் ஆடியோ லான்ச் திட்டமிட்டிருந்த நிலையில், அங்கு எந்த கல்லூரியிலும் அனுமதி கிடைக்கவில்லை. பிறகு, புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றில் நடத்தலாம் என்ற முயன்ற போதும் அனுமதி கிடைக்கவில்லையாம்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
master update thalapathy vijay lokesh kanagaraj

master update thalapathy vijay lokesh kanagaraj

'அப்டேட்' என்ற வார்த்தையை கேட்டாலே தளபதி ரசிகர்கள் குஷியாகி விடுகிறார்கள்.  தூக்கத்தில் எழுப்பி அப்டேட் என்று சொன்னல் கூட, 'இது வந்துட்டேன்....' என்று அதிர விடுகிறார்கள். அதிலும், மாஸ்டர் அப்டேட் என்று சொல்லிப் பாருங்களேன்..... அது என்னவென்று நீங்க சொல்லாவிட்டால் ஆள் காலி.

Advertisment

ஆனால், இங்கு நாம் அவர்களை ஏமாற்றப் போவதில்லை. மாஸ்டர் படத்தின் ஒரு எக்ஸ்க்ளூஸிவ் தகவல் உங்களுக்காக காத்திருக்கிறது.

யெஸ்...யெஸ்.... ஆடியோ லான்ச் அப்டேட் தான்.

Advertisment
Advertisements

எந்த படத்துக்கும் இல்லாத வகையில், விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச்சுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீதான ஐடி ரெய்டும், படப்பிடிப்பு தளத்தில் இருந்தே விஜய்யை விசாரணைக்கு அழைத்துச் சென்றதும் அவரது ரசிகர்களை மிகவும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

35 ஆண்டுகள் கழித்து ‘கம்பேக்’ தரும் பாரதிராஜாவின் ஹீரோ

இது குறித்து விஜய் என்ன சொல்லப் போகிறார் என்பதை ரசிகர்கள் மட்டுமல்ல, சாமானிய மக்களும் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், விஜய்யின் மாஸ்டர் பட ஆடியோ லான்ச் சென்னையின் லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெறவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து நமக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து ஏற்கனவே சில செய்திகள் லீக் ஆகியிருந்தாலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பில், விஜய்க்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்ததில் நமக்கு இத்தகவல் கிடைத்துள்ளது.

முதலில் கோவையில் ஆடியோ லான்ச் திட்டமிட்டிருந்த நிலையில், அங்கு எந்த கல்லூரியிலும் அனுமதி கிடைக்கவில்லை. பிறகு, புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றில் நடத்தலாம் என்ற முயன்ற போதும் அனுமதி கிடைக்கவில்லையாம். இதற்கு பிறகே, லீலா பேலஸில் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் தீவிரமடைந்து உள்ளதாம்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று நம்மிடம் தெரிவித்துள்ளனர். மிக மிக விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகிறதாம். எனினும், கடைசி நேர மாறுதலுக்கு இத்தகவல் உட்படலாம்.

அப்புறம் என்ன... தெறிக்க விட வேண்டியதுதான்!!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Actor Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: