scorecardresearch

35 ஆண்டுகள் கழித்து ‘கம்பேக்’ தரும் பாரதிராஜாவின் ஹீரோ

தெலுங்கில் ஹிட்டான ‘C/O காஞ்சரபாலம்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்தப் படம்.

Mudhal Mariyathai Deepan
Mudhal Mariyathai Deepan

Mudhal Mariyathai Deepan : இயக்குநர் பாரதிராஜா ஒவ்வொரு படமும், காலத்தால் அழியாதவை. அதிலும் முதல் மரியாதை திரைப்படம் பலருக்கும் பிடித்தமான ஒன்று. சிவாஜி, ராதா, வடிவுக்கரசி, தீபன், ரஞ்சனி ஆகியோர் நடித்திருந்தனர். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருந்தார்.

டூ வீலரில் போகும் போது கூட படிப்பு, வீடியோ வைரல்

1985-ல் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தில் சிவாஜியின் தங்கை மகனாக, ரஞ்சனிக்கு ஜோடியாக தீபன் நடித்திருந்தார். இவர்கள் இளம் ஜோடிகளாகவும், சிவாஜி – ராதா மூத்த ஜோடியாகவும் படத்தில் நடித்திருந்தார்கள். இளம் ஜோடிகளின் ‘அந்த நிலாவ தான் என் கையில புடிச்சேன்’ பாடல் கிராமத்து ரொமான்ஸை இயல்பாக திரையில் காட்டியது. முதல் மரியாதை படத்துக்குப் பிறகு வேறெந்த படத்திலும் தீபன் நடிக்கவில்லை.

நடிப்பிலிருந்து விலகிய தீபன், கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தார். இந்நிலையில் 35 ஆண்டுகள் ஆகி, மீண்டும் காதல் படத்தில் நடிக்க வந்துள்ளார். இப்போது ‘C/ O காதல்’ திரைப்படத்தில் ‘கம்பேக்’ கொடுத்திருக்கிறார். தெலுங்கில் ஹிட்டான ‘C/O காஞ்சரபாலம்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்தப் படம். ’ஜீவி’, ’8 தோட்டாக்கள்’ ஆகியப் படங்களில் ஹீரோவாக நடித்த, வெற்றி இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கண்ணாம்மாவ கலங்கடிக்க வெண்பாவும், அஞ்சலியும் போட்ட பிளான்ல இப்படி ஒரு ட்விஸ்ட்டா?

தீபனை விமான நிலையத்தில் சந்தித்த இயக்குநர் தனது படத்துக்காக அப்ரோச் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் தயங்கிய அவரை இறுதியாக சம்மதிக்கவும் வைத்துள்ளார். இப்படத்தில் கேரள அரசியல்வாதி சோனியா கிரியுடன் தீபன் ஜோடியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Mudhal mariyathai deepan comeback after 35 years