பேஸ்புக்கில், ட்விட்டட் போன்ற சமூக ஊடங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பள்ளிக்கு செல்லும் மாணவன், வீட்டுப்பாடத்தை ஓடும் பைக்கில் செய்து கொண்டிருக்கிறான். மூன்று பேர் அந்த டூ வீலரில் பயணம் செய்கின்றனர்.
இந்த வீடியோவை பார்க்கும் பொழுது, அந்த மாணவன் இந்த செயலை முதல் முறை செய்கிறான் என்பது போல் தெரியவில்லை. நல்ல தேர்ச்சி, நல்ல அனுபவம் இருப்பதாக தெரிகிறது. இந்த செயலை மற்றொரு வாகனத்தில் வந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக ஊடங்களில் பதிவேற்றினார். வீடியோ எடுப்பதை பார்த்த அந்த பெண்(அந்த மாணவனின் தாயாக இருக்ககூடும் ) புன்னகைப்பதா? அல்ல முகத்தை மறைப்பதா? என்ற குழப்பத்தில் வண்டி ஓட்டுவது போல் தோன்றுகிறது.
இருந்தாலும், சாலையில் பயணிக்கும் போது போதிய கவனத்தோடு செல்ல வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வீட்டுப் பாடம் முடிக்க வேண்டும் என்ற பதட்டத்தில் மாணவனின் கவனம் சிதற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.