Bharathi Kannamma Serial : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படுகிறது.
பார்மலின் தடவப்பட்ட மீன்கள் : “மீனா”ட்சிபட்டினத்தில் (மதுரையில்) பயங்கரம்
டாக்டரான பாரதியின் மனைவி கண்ணம்மா. ஆனால் அவனது அம்மா செளந்தர்யாவுக்கு கறுப்பு என்றாலே பிடிக்காது. கண்ணம்மா கறுப்பாக இருப்பதால் அவளை வெறுக்கிறார். கண்ணம்மா அப்பாவின் இளையதாரத்தின் மகள் அஞ்சலி. அவளை பாரதியின் தம்பி அகிலனுக்கு பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால் அவளுக்கோ, பாரதியைப் பிடித்து விடுகிறது. இருப்பினும் அவனை அடைவதற்காக, அகிலனை திருமணம் செய்துக் கொள்கிறாள்.
ஆத்தி.. இந்த டுவிஸ்ட்ட எதிர்பாக்கலையே! ????
பாரதி கண்ணம்மா – திங்கள் முதல் வெள்ளி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BarathiKannamma #VijayTelevision pic.twitter.com/zQMuLu5rcM
— Vijay Television (@vijaytelevision) March 2, 2020
பாரதியை கல்லூரியிலிருந்தே ஒருதலையாகக் காதலித்தவள் வெண்பா. கண்ணம்மாவிடம் இருந்து பாரதியைப் பிரிக்க வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை தீட்டுகிறாள். அப்படி அவள் ஏற்படுத்திய விபத்தில் பாரதிக்கு அடிப்பட்டு விடுகிறது. இதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வெண்பா, இனி உனக்குக் குழந்தைப் பிறக்காது என்கிறாள். இதை நம்பிய பாரதி, வேறெந்த மருத்துவரிடமும் பரிசோதிக்காமல் விட்டு விடுகிறான். ஆனால் தனக்கு தான் குழந்தைப் பிறக்காது என கண்ணம்மா தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
யோகா, ரிலாக்ஸ், வழிபாடு – புத்துணர்ச்சியுடன் தொடங்கிய பொதுத் தேர்வு (ஸ்பெஷல் படங்கள்)
இதற்கிடையே தற்போது பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. குடுகுடுப்பைக்காரர் இந்த வீட்டுக்கு புது உயிர் வரப் போகிறது என்கிறார். தலைசுற்றல், வாந்தி, மயக்கம், பிடித்த உணவே பிடிக்காமல் போவது என கர்ப்பமானவர்களுக்கு வரும் அனைத்து அறிகுறியும், கண்ணம்மாவுக்கும் வருகிறது. குழந்தை பிறக்காது என அழுத்தமான நம்பிக்கையில் இருந்த அஞ்சலிக்கு இது அதிர்ச்சியைத் தருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”