பார்மலின் தடவப்பட்ட மீன்கள் : "மீனா"ட்சிபட்டினத்தில் (மதுரையில்) பயங்கரம்

Formalin fish seized in Madurai : பார்மலின் தடவப்பட்ட மீன் உள்ளிட்ட கடல் உணவுப்பொருட்களை பயன்படுத்துவோருக்கு புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, கருச்சிதைவு உள்ளிட்ட குறைபாடுகள்...

மதுரை கரிமேடு மீன் சந்தையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், பார்மலின் ரசாயனம் தடவப்பட்ட 2 டன் மீன்கள் உள்ளிட்ட கடல் உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம், மீன் உணவு பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கரிமேடு பகுதியில், மீன் சந்தை இயங்கி வருகிறது. ராமநாதபுரம் உள்ளிட்ட பலபகுதிகளில் இருந்து மீன்கள், நண்டுகள் உள்ளிட்ட கடல் உணவுப்பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மொத்த விற்பனையாளர்களின் வசதிக்காக, இரவு 10 மணிக்கு வர்த்தகம் துவங்குகிறது. காலைவேளைகளில், குடும்பத்தினர் இங்கு வந்து மீன் வாங்கிச்செல்கின்றனர்.

இந்நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குழு, இங்கு அதிரடி சோமீன் உணவு பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி : “மீனா”ட்சிபட்டினத்தில் (மதுரையில்) பயங்கரம்தனை நடத்தியது. இந்த சோதனையில், மனித சடலங்களை கெடாமல் காக்க பயன்படுத்தப்படும் பார்மலின் வேதிப்பொருள் தடவப்பட்ட மீன்கள், நண்டுகள் உள்ளிட்டவைகள் 2 டன் அளவில் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு, மதுரையில் உள்ள மீன் உணவு பிரியர்கள் மட்டுமல்லாது அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மீன் நுகர்வோர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பார்மலினால் என்ன பாதிப்பு : பார்மலின் தடவப்பட்ட மீன் உள்ளிட்ட கடல் உணவுப்பொருட்களை பயன்படுத்துவோருக்கு புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, கருச்சிதைவு உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close