/tamil-ie/media/media_files/uploads/2021/01/master-release-date-1200.jpg)
Master Movie Review
Master Tickets in Australia Tamil News : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் 'மாஸ்டர்' திரைப்படம் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் உருவாகியுள்ளது. 13-ம் தேதி வெளியாகவுள்ள இந்தத் திரைப்படத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் ஆன்லைனில் மட்டுமல்லாமல் நேரடியாக தியேட்டர்களிலும் கலவரமே நடந்துகொண்டிருக்கின்றது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் தமிழ்ப் படத்திற்கு அதீத வரவேற்பு பெற்ற முதல் திரைப்படமாக 'மாஸ்டர்' உருவாகியுள்ளது.
தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் 'மாஸ்டர்' திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் முதல் நாளில் கிட்டத்தட்ட 220 ஷோக்களை புக் செய்து அந்நாட்டில் புதிய சாதனை படைத்துள்ளது.
இதற்கிடையில், தமிழக அரசு மத்திய அரசின் ஆலோசனைக்குப் பின்னர் தனது 100% இருக்கை ஆக்கிரமிப்பை 50%-ஆக ரத்து செய்துள்ளது. சிம்புவின் 'ஈஸ்வரன்' திரைப்படம் 'மாஸ்டர்' படத்திற்கும் ஒரு நாள் கழித்து வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ள பிற படங்களின் வெளியீட்டை 'மாஸ்டர்' முடிவு செய்யும் என்பதால், படத்தின் வெளியீட்டில் திரைப்படத் தயாரிப்பாளர்களும் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். இப்படி பல்வேறு காரணிகளுக்கு இடையில் விஜயின் மாஸ்டர் திரைப்படத்திற்கான வரவேற்பு மேலும் அதிகரித்துள்ளது. 'மாஸ்டர்' தயாரிப்பாளர்கள் தினமும் படத்திலிருந்து ஒரு விளம்பரத்தை வெளியிட்டு வருகிறார்கள். இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.