Advertisment
Presenting Partner
Desktop GIF

மாஸ்டர் Vs ஈஸ்வரன் சிறந்த படம் எது ? வலைதளங்களில் ஒப்பிடும் ரசிகர்கள்

Master Vs Eswaran : பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகியுள்ள மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படம் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
மாஸ்டர் Vs ஈஸ்வரன் சிறந்த படம் எது ? வலைதளங்களில் ஒப்பிடும் ரசிகர்கள்

Master Vs Eswaran : தமிழரின் பாரம்பரிய பண்டியகையான பொங்கல் திருநாளை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர், சிம்பு நடிப்பில் ஈஸ்வரன், ஜெயம்ரவி நடிப்பில், பூமி ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இதில் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்களும், நேரடியாக தியேட்டரில் வெளியான நிலையில், ஜெயம் ரவியின் பூமி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு கிட்டத்தட்ட 11 மாதங்கள் கழித்து தியேட்டாகளில் வெளியான மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

மாநகரம், கைதி ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் கவனிக்கப்படும் இயக்குநராக வலம் வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே வெளியாக இருந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியீடு தள்ளிப்போய் தற்போது பொங்கல் தினத்தை முன்னிட்டு நேற்று (ஜன.13) வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனா விஜய் சேதுபதி நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களான விஜய், மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை இருவரது ரசிகர்களும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

வென்னிலாகபடிக்குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் சுசீந்திரன், தொடர்ந்து கிராமத்து கதைகளை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென் தனி இடத்தை பிடித்துள்ளார். தற்போது இவரது இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்தள்ள படம் ஈஸ்வரன். குறுகிய கால தயாரிப்பாக உருவான இந்த படத்தில் சிம்பு மீண்டும் கிராமத்து நாயகனாக நடித்துள்ளார். பொங்கல்பண்டிகை முன்னிட்டு இன்று வெளியான இந்த படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குடும்பம் மற்றும் கிராமத்து பின்னணி கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போது தனி மரியாதை உண்டு. அந்த வகையில் சிம்புவின் ஈஸ்வரனுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாஸ்டர் படத்தை பார்த்த ஈஸ்வரன் படத்தின் இயக்குநர் சுசீந்திரன், துப்பாக்கி படத்திற்கு பிறகு விஜய் மாஸ்டர் பீஸாக இந்த படம் உள்ளது என பாராட்டியுள்ளார். மேலும் ஈஸ்வரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிம்பு விஜய் ரசிகர்கள் என் படத்தை பாருங்கள், என் ரசிகர்கள் மாஸ்டர் படத்தை பாருங்கள் என கூறியிருந்தார். இதனால் இந்த இரு படங்களுக்குமான எதிர்பார்ப்பு எகிறிய நிலையில், ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்த நாளில் இந்த இரு படங்களும் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்த இரு படங்களிலும் ஹீரோக்களுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் குறைவாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. மாஸ்டர் படத்தில் ஜே.டி கேரக்டரில்  நடித்த விஜயை விட பாவனி கேரக்டரில் நடித்த விஜய்சேதுபதிக்கே அதிக முக்கியத்துவம் உள்ளதாகவும், ஈஸ்வரன் படத்தில், ஈஸ்வரனாக நடித்த சிம்புவை விட ஈஸ்வரனின் அப்பா பெரியசாமியாக நடித்த பாரதிராஜாவுக்கே அதிக முக்கியத்துவம் உள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவர்களது ரசிகர்கள் தங்களது விருப்ப நாயகனை திரையில் ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாஸ்டரா? ஈஸ்வரனா? இதில் எந்த படம் சிறந்தது என சமூக வளைதளங்களில் ரசிகர்கள்  தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  அதில் ஒரு சில ட்விட்கள் உங்கள் பார்வைக்கு...

இரு நாயகர்களின் ரசிகர்களும் இந்த படங்கள் குறித்து எதிர் எதிர் கருத்துக்கள் தெரிவித்தாலும், இரு வேறு கதைகளத்தில் வெளியாகியுள்ள இந்த இரண்டு படங்களும் பொதுவான ரசிகர்களுக்கு பிடிக்கும் அளவுக்கே உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment