Master’s Kutty story reached 60 million views on Youtube : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகி வருகிறது மாஸ்டர் திரைப்படம். இந்த திரைப்படம் சம்மரில் வெளியாகும் என்று நினைத்திருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்திருக்கும் நிலையில் வாத்தி கம்மிங், லைஃப் இஸ் டூ ஷார்ட் நண்பா பாடலும் வெறித்தனமான ஹிட் தான்.
இன்கம் டேக்ஸ் துறையினர் ரெய்டிற்கு பிறகு வெளியான குட்டி ஸ்டோரி அப்போது இருந்தே மாஸ் ஹிட் தான். தற்போது யூடியூபில் அந்த பாடல் கிட்டத்தட்ட 6 கோடி நபர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது சோனி மியூசிக்.
AN ABSOLUTELY PHENOMENAL #60MillionViewsForKuttiStory, NANBA! ????????
Konjam chill pannu , Maapi with #Thalapathy‘s #KuttiStory now????➡️https://t.co/GEbmVK0O1X@anirudhofficial @Dir_Lokesh @Jagadishbliss @Lalit_SevenScr @XBFilmCreators @Arunrajakamaraj @filmmaker_logi #Master pic.twitter.com/9Q52a1IEtr
— Sony Music South (@SonyMusicSouth) June 11, 2020
அனிருத் இசையமைப்பில் உருவான இந்த பாடலை பாடியுள்ளார் நடிகர் விஜய். இந்த பாடலை பார்த்து ரொம்ப நாள் ஆச்சுன்னு நீங்க ஃபீல் பண்ணுனீங்கன்னா, இதோ உங்களுக்காக மறுபடியும் நண்பா.
பிப்ரவரி 14 முதல் இன்று வரை அதாவது 4 மாதங்களில் 60 மில்லியன் வியூக்களை குவித்துள்ளது இந்த பாடல். இந்த படத்தின் குழுவினருக்கு நாமும் ஒரு க்யூட் குட்டி வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வோம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil