Maathare Lyric Video: சர்கார் படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் ‘பிகில்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இயக்குநர் அட்லீ இயக்கியிருக்கும் இந்தப் படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது. 2017-ல் ’மெர்சல்’, 2018-ல் ’சர்கார்’ ஆகியவற்றைத் தொடர்ந்து ’பிகில்’ மூலம், தன் ரசிகர்களுக்கு ஹாட்ரிக் ட்ரீட் தருகிறார் விஜய். இந்தப் படத்தின் பணிகள் முழுவதும் முடிந்து சென்சார் ஃபார்மாலிட்டிஸும் நிறைவடைந்துவிட்டது. படத்தைப் பார்த்த சென்சார் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. பிகில் படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் என தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் அறிவித்துள்ளது.
Advertisment
இந்தப் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த வாரம் இதன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியாவில் வெளியிடப்பட்ட ட்ரெய்லர்களில் யூடியூபில் அதிக லைக்குகள் வாங்கிய படம் என்கிற பெருமையும் “பிகில்” ட்ரெய்லருக்கு கிடைத்தது.
இந்நிலையில் பிகில் படத்தில் இடம்பெற்றிருக்கும், ’மாதரே’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றுக் கூறி இதனை வெளியிட்டிருந்தார், பிகில் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.
நேற்று மாலை 7 மணிக்கு ‘மாதரே’ லிரிக் வீடியோ வெளியிட்டதும், விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், பாடலை எழுதிய விவேக், அதனைப் பாடிய சின்மயி என அனைவரையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டினர். பெண்களை கொண்டாடும் விதமாக இருப்பதாகக், குறிப்பிட்டிருந்த சில ரசிகர்கள் இப்பாடலை தங்கள் வீட்டு பெண்களுக்கு டெடிகேட் செய்வதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.