தமிழ் சினிமாவில் தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்ற நிலை இருந்தபோது, படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் தற்போது இந்த நிலை மாறி, சமீபத்திய ஆண்டுகளாக வெளியாகும் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டு வெளியாகி வருகிறது. இந்த பெயர்கள், ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
ஒரு வாரத்தில் 5 படங்கள் வெளியானால் அதில் 4 படங்கள் ஆங்கில பெயர்களில் தான் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த கோடை விடுமுறையின் தொடக்கத்தை கொண்டாடும் வகையில், 2 படங்கள் வெளியாக உள்ளது. கோடை விடுமுறையின் முக்கிய மாதமாக இருக்கும் மே மாதம் தொடங்க உள்ள நிலையில்,மே முதல் நாள் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 2 தமிழ் படங்கள் மற்றும் ஒரு தெலுங்கு படம் வெளியாக உள்ளது.
ரெட்ரோ
சூர்யா – பூஜா ஹெக்டே ஜோடி சேர்ந்துள்ள படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படம், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவின் முந்தைய படமான கங்குவா பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி தோல்வியை சந்தித்துள்ளதால், இந்த படத்தின் மூலம் வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சூர்யா. அதற்கு ஏற்றபடி இதற்கு முன்பு வெளியாக இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
டூரிஸ்ட் ஃபேமிலி
முதல்முறையாக சசிகுமார் – சிம்ரன் இணைந்து நடித்துள்ள படம் டூரிஸ்ட் ஃபேமிலி. ஈழத்தமிழர்களின் வாழ்வியலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், ரிலீஸ்க்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் டிரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பெரிய வெற்றிப்படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது
ஹிட்: தி தேர்டு கேஸ்
தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற ஹிட் மற்றும் ஹிட் 2 படங்களின் வரிசையில், 3-வது படமாக ஹிட்: தி தேர்டு கேஸ்
படம் தயாராகியுள்ளது, முதல் 2 பாகத்தை தயாரித்த நானி, 3-வது பாகத்தை தயாரித்துள்ளது மட்டுமல்லாமல் படத்தின் நாயகனாகவும் நடித்துள்ளார். கன்னடத்தில் கே.ஜி.டிஃப், தமிழில் கோப்ரா ஆகிய படங்களில் நாயகியாக நடித்த ஸ்ரீநிதி நாயகியாக நடித்துள்ள இந்த படம் நானிக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது,