”எப்பா மாயன் நீ பிறவி நடிகன் -ப்பா “ தாலி சென்டிமென்ட் ஒர்க்கவுட் ஆகுது!

எப்படியோ பல தில்லாலங்கடி வேலைகளை செய்து மகாவை திருணம் செய்து கொள்கிறான்.

mayan maha naam iruvar namakku iruvar : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்த ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டது தற்போது அந்த சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதல் பாகத்தில் நடித்த செந்தில் ஹீரோவாகவும், ’சரவணன் மீனாட்சி’யில் நடித்து புகழ் பெற்ற ரச்சிதா ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள்.

சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து புகழ் பெற்றார். அதேபோல் ரச்சிதாவும் சரவணன் மீனாட்சி சீரியல் சீசன்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கலந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. செந்தில் மாயனாகவும், ரச்சிதா மகாவாகவும் இதில் நடித்து வருகிறார்கள்.

சின்ன வயதிலிருந்தே மாமா மகள் மகா மீது மிகவும் பிரியமாக இருக்கிறான் மாயன். வளர்ந்து பெரியவனானதும் மகா தான் உலகம் என வாழ்கிறான். ஆனால் மகாவுக்கு அப்படியான ஐடியா எதுவுமில்லை. இதற்கிடையே மகாவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். இதனால் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிறான் மாயன். எப்படியோ பல தில்லாலங்கடி வேலைகளை செய்து மகாவை திருணம் செய்து கொள்கிறான்.

விருப்பம் இல்லாத திருமணம் என்பதால் மகாவுக்கு மாயன் மீது வெறுப்பு அதிகம். அதே நேரம் கூடவே இருந்து, மாயனின் சில நல்ல குணங்களை கவனித்த மகா மாயனை வெறுப்பதை குறைத்து கொள்கிறாள். சண்டை முடிந்து காதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் தான் காயத்ரிக்கு கத்தியுடன் திருமணம் செய்து வைத்து வெறுப்பை அதிகப்படுத்திக் கொள்கிறான் மாயன்.

இந்நிலையில் ஏதாவது செய்து மகா மனதில் மாயன் இருக்கிறானா என்பதை தெரிந்து கொள்ள கத்தி கொடுக்கும் பயங்கரமா ஒர்க் அவுட் ஆகுது .. நீங்களே பாருங்களேன்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mayan maha naam iruvar namakku iruvar serial naam iruvar namakku iruvar vijay tv hotstar

Next Story
முதல்முறையாக ஆழ்கடலில் திருமணம் செய்த இளம் ஜோடி: தமிழக தம்பதிக்கு நெட்டிசன்கள் வாழ்த்துdeep sea marriage in india, tamil nadu couple gets deep sea marriage, deep sea marriage in india first time, deep sea marriage video, இந்தியாவில் ஆழகடலில் திருமணம் வீடியோ, முதல்முறையாக ஆழ்கடலில் திருமணம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express