நடிகைச்சுவை நடிகர் மயில் சாமியின் மறைவுச் செய்தி திரையுலகத்தினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் மயில்சாமி ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் நமது நினைவுகளில் வந்து செல்கிறது.
’பாலயத்து அம்மன்’ படத்தில், விவேக் வெள்ளை சட்டை போட்டுக்கொண்டு வயதானவராக பேசுவார், நடுவில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இருப்பார். அந்த பக்கம் மயில்சாமியும் ஒரு பிரபலமாக அமர்ந்திருப்பார். இதில் விவேக், மயில்சாமியை கடுமையாக விமர்சிப்பார். மேலும் ஒரு போலிச் சாமி கதாபாத்திரத்தை மயில்சாமி ஏற்று நடித்திருப்பார். இந்த காட்சியில் விவேக் கேட்கும் எல்லா குதர்க்கமான கேள்விக்கும் அவர் பொருமையாக பதிலளிப்பார். சிரித்துகொண்டே இருப்பார். இந்த படம் வெளிவந்தபோது, பிபலங்களின் நேர்காணலங்கள் இன்று போல பிரபலமாக இல்லை. ஆனால் இந்த காட்சியை நாம் இப்போதும் தொடர்புபடுத்திகொள்ள முடியும்.
இதுபோல ’தூள்’ படத்தில் விவேக்கை ஏமாற்றும் காட்சிகளில், நடித்து அசத்தியிருப்பார் மயில் சாமி. திருப்பதி தேவஸ்தானம் இப்போது ஜிலேபிதான் தருகிறார்கள் என்று விவேக்கை நம்பவைக்கும் இடம் பார்க்கும் எல்லோரையும் சிரிக்க வைக்கும். இந்த படம் முழுக்க விவேக் – மயில் சாமியின் காம்போ அட்டகாசமாக பொருந்தியிருக்கும்.
கில்லி படத்தில் மிகவும் குறைந்த காட்சிகளில்தான் மயில்சாமி நடித்திருப்பார். ஆனால் அவர் அதில் ஏற்று நடித்த குடிகாரன் போன்ற கதாபாத்திரத்தில் அவர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அவரின் உடல் மொழி, பேச்சு, நடவடிக்கை அனைத்திலுமே ஒரு குடிகாரனின் சாயலை வெளிப்படுத்திருப்பார். சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், அவரது நடிப்பின் மூலம், நமது மனதில் இடம் பிடித்திருப்பார்.
உதயநிதி நடிப்பில் வெளியான ரிமேக் படமான நெஞ்சுக்கு நீதி படத்தில் காவல்துறை கான்ஸ்டபிள்-ஆக நடித்திருப்பார். இந்தியில் இவரது பாத்திரத்தில் நடித்திருந்தவரை விட மிகவும் எதார்த்தமாக இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். எந்த வித நகைச்சுவை இல்லாத கதாபாத்திரம் என்றலும், ஒரு நடிகனாக இந்த படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நெயர்தியாக கையாண்டிருப்பார்.
இதுபோல விசில், 2.0, எல்.கே.ஜி, கலவாணி 2, சண்டைக் கோழி 2, வீட்டுல விசேஷம், ரெமோ, க.க.போ, கோ 2, மனிதன், காஞ்சனா 2, மாப்பிள்ளை சிங்கம், தி லெஜண்ட் படங்களிலும் அவர் நடித்துள்ளார். அவர் நடிக்காத தமிழ் படங்கள் இல்லை என்றளவுக்கு அவர் நடித்துள்ளார். இந்நிலையில் அவரது மறைவு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பாக இருக்கும் .