பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் பிறந்தவர். 1984-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானர். இவர் கமல் மற்றும் ரஜினியுடன் நடித்துள்ளார்.
இவர் நடிகர் விவேக் உடன் சேர்ந்து நடித்த படங்களில் உள்ள நகைச்சுவை இவரை மேலும் பிரபலமாக்கியது. இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
சென்னையில் உள்ள சாலிகிராமத்தில், வசித்து வந்த இவருக்கு இன்று காலை உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இவரை குடும்பத்தினர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் முன்பே உயிழிந்துள்ளார். இவரின் இறப்பை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவரது மரணம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.