’பத்மாவத்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில், ராஜஸ்தான், ஹரியானா என பாஜக ஆளும் மாநிலங்களில் அத்திரைப்படத்திற்கு இன்றும் எதிர்ப்பு தொடருகிறது.
Advertisment
பத்மாவத் திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது என, உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய் கிழமை உத்தரவிட்ட நிலையில், அப்படத்தை திரையிட முடியாது என ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், மஹராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கர்னி சேனா அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர். நேற்று இத்திரைப்படம் வெளியான நிலையில், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் படத்தை திரையிட மாட்டோம் என மல்டிபிளெக்ஸ் தியேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், அந்த மாநிலங்களில் பத்மாவத் திரைப்படம் இன்று வெளியாகவில்லை.
இந்நிலையில், ஹரியானா மாநிலம் குருகிராமில் ராஜ்புத் சமுதாயத்தை சேர்ந்த அமைப்பினர் பள்ளி வாகனம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சத்திலிருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியது.
இதனிடையே, பாகிஸ்தானில் அத்திரைப்படத்திற்கு எந்தவித ’கட்’டும் இல்லாமல், யு சான்றிதழை அளித்துள்ளது அந்நாட்டு திரைப்பட தணிக்கை வாரியம்.
இந்த செய்தியை தணிக்கை வாரியத்தின் தலைவர் மொபாஷீர் ஹாசன், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அவரை, சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
Central Board of Film Censors #CBFC has declared a feature film containing Indian cast & crew #Padmaavat without any excision suitable for public exhibition in the cinemas with a ‘U’ certification. #CBFC#Unbiasedforartscreativity&healthy entertainment