Advertisment

சாத்து நட சாத்து… பாடலுக்கு சிக்னேச்சர் ஸ்டெப் போட்டு ஆடிய மீனா; விஜய் டிவி நிகழ்ச்சியில் சிரிப்பலை

சேதுபதி ஐ.பி.எஸ் படத்தில் தான் கவர்ச்சியாக ஆடிய பாடலுக்கு மீண்டும் அதேபோல் ஆடிய மீனா; விஜய் டிவி நிகழ்ச்சியில் அரங்கம் அதிர்ந்தது

author-image
WebDesk
Aug 31, 2023 22:44 IST
Meena

மீனா

சேதுபதி ஐ.பி.எஸ் படத்தில் இடம் பெற்ற ’இப்போ ’சாத்து நட சாத்து’ பாடலுக்கு விஜய் டிவி நிகழ்ச்சியில் நடிகை மீனா கொடுத்த ரியாக்சன்களால் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் பெரிய வரவேற்பை பெற்ற ஷோ ஸ்டார்ட் மியூசிக். வி.ஜே பிரியங்கா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், வாரந்தோறும் பல கலைஞர்கள் இரு அணிகளாக கலந்து கொள்வார்கள்.

இதையும் படியுங்கள்: எனக்கும் ஒரு துணை தேவை… 48 வயதில் திருமணம் குறித்து மனம் திறந்த நடிகை நக்மா

அந்தவகையில், இந்த வாரம் 90களின் கதாநாயகிகள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் மீனா, மற்றும் சங்கவி ஆகியோர் ஒரு அணியாக கலந்து கொண்டுள்ளனர்.

இதில் ’என்ன பாட சொல்லாத’ என்ற சுற்றில் ஒரு அணியில் உள்ளவர்களுக்கு 3 பாடல்கள் கொடுக்கப்படும். அந்த அணியில் உள்ள ஒருவர் அதை நடித்துக் காட்ட, அந்த சரியான பாடலை காதில் ஹெட்போன் மாட்டியிருப்பவர் கண்டுபிடிக்க வேண்டும். அது போல் எதிரணிக்கும் இதே போல் நடத்தப்பட்டு அந்த சுற்றின் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.

அந்த வகையில், மீனா ஆக்ஷனில் இறங்க சங்கவி ஹெட்போனை மாட்டிக் கொண்டு நின்றார். மீனாவுக்கு சாத்து நட சாத்து பாடல் ஒளிபரப்பப்பட்டது. உடனே மீனா நான் சேதுபதி ஐ.பி.எஸ் படத்தில் எப்படி நடனம் ஆடினாரோ அதே போல் சூப்பர் ஸ்டெப்ஸ் போட்டார். இதற்கு அரங்கமே அதிர்ந்தது. ஆனால் சங்கவியால் அந்த பாடலை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் சாத்து என்பதற்காக இரு கைகளையும் மூடுவது போல் கூட மீனா நடித்து காட்டினார். ஆனால் சங்கவி, சாத்து, மூடு என அதன் பெயர்களை சொன்னாரே தவிர சரியான பாடலை கண்டுபிடிக்கவில்லை. அந்த பாடலை கண்டுபிடித்தாரா இல்லை டைம் முடிந்துவிட்டதா என்பதை வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி பார்ப்போம்.

விஜயகாந்த், மீனா நடித்த சேதுபதி ஐ.பி.எஸ் படத்தில் விஜயகாந்த் ஐபிஎஸ் ஆபிசராகவும், மீனா ஒரு பள்ளியில் ஆசிரியையாகவும் நடித்திருப்பர். அப்போது மீனாவின் பள்ளியை தீவிரவாதிகள் பிணையாக பிடித்து கொண்டு விஜயகாந்திடம் பேரம் பேசுவார்கள். அப்போது, தீவிரவாதிகளின் கவனத்தை திசைதிருப்பி போலீஸாரை உள்ளே விடும் முயற்சியாக மீனா கவர்ச்சியாக நடனம் ஆடுவார். அந்த பாடல்தான் இந்த ’சாத்து நட சாத்து’ பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

#Meena #Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment