இயக்குனர் சத்யன் அந்திகாட்டின் ‘மகள்’ படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீரா ஜாஸ்மின் மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்கிறார்.
அந்தவகையில் புதன்கிழமை நடிகை மீரான் ஜாஸ்மீன், புதிதாக இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி, அதில், ‘மகள்’ படத்தின் ஒர்க்கிங் ஸ்டில் ஒன்றை வெளியிட்டார், இப்படத்தில் ஜெயராமுடன் ஜூலியட் வேடத்தில் மீரா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் பல மறக்கமுடியாத நடிப்பை வழங்கிய தேசிய விருது பெற்ற நடிகை மீரா ஜாஸ்மீன், கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஊடக வெளிச்சத்தில் இருந்து விலகி இருந்தார்.
“ஒரு நேரத்தில் ஒரு நினைவாக நம் அனைவரையும் ஒருவருக்கொருவர் நெருக்கமாகக் கொண்டுவரும் இந்த நடவடிக்கையை எடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று மீரா தனது முதல் இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
மீராவின் புதிய தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், அவர் முன்பை விட இப்போது அழகாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் இணைந்த ஒரே நாளில், மீரா-வை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் மேல் உயர்ந்தது.
மேலும் பல பிரபலங்களும், இன்ஸ்டாவுக்கு மீராவை வரவேற்று தங்கள் அன்பை தெரிவித்தனர்.
மீரா ஜாஸ்மின் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள சினிமாவில் மீண்டும் நுழைவதற்குத் தயாராகிவிட்டார். மேலும் ‘மகள்’ அவரது இரண்டாவது இன்னிங்ஸுக்கு ஏற்ற படமாகத் தெரிகிறது!
மீரா ஜாஸ்மின் மற்றும் சத்யன் அந்திகாட் ஆகியோர் இதற்கு முன்பு 'அச்சுவின்டே அம்மா', 'ரசதந்திரம்', 'வினோதயாத்ரா', மற்றும் 'இன்னாதே சிந்த விஷயம்' உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர், அதனால் மகள் படம் ரசிகர்கள் மத்தியில், மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை சத்யன் அந்திகாட் உறுதி செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“