மீரா மிதுனின் சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்த இயக்குநர்

Director Naveen: முதலில் இதை ஒரு விவகாரமாக்க நான் விரும்பவில்லை. ஆனால் இப்போது…

Meera Mithun allegation, agni siragugal, director naveen
Meera Mithun

Meera Mithun: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான மீரா மிதுன் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அவர் அந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு முன்பும், பின்பும் நிறைய சர்ச்சைகளில் சிக்கினார்.

தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஆனால் இந்த முறை அவர் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனின் மீது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார். ‘அக்னி சிறகுகள்’ என்ற படத்திலிருந்து தன்னை நீக்கிவிட்டு, அக்‌ஷரா ஹாசனை சேர்த்ததில் கமல் ஹாசனுக்கு பங்கு இருப்பதாக மீரா மிதுன் கூறியுள்ளார்.

இதற்கு அக்னிச் சிறகுகள் படத்தின் இயக்குநர் நவீன், ” ‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் ஷாலினி பாண்டேவுக்கு பதிலாகத் தான் அக்‌ஷரா ஹாசன் நடிக்கிறார். அவர் தான் முதன்மை நாயகி. மீரா மிதுன் முதன்மை நாயகியாக ஒப்பந்தம் செய்யப்படவில்லை. எனக்குத் தெரியாமலேயே பத்திரிகைகளில் தான் படத்தில் இருப்பதாகச் சொல்லி வருகிறார். முதலில் இதை ஒரு விவகாரமாக்க நான் விரும்பவில்லை. ஆனால் இப்போது….” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

நவீனின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த மீரா மிதுன், “உங்களுக்கு இந்தப் பேட்டி ஞாபகம் இருக்கிறதா?. இந்த விவகாரத்தில் ஊடகமும் பொய் சொல்கிறது என்கிறீர்களா? ஏஞ்சலினா ஜுலி போல நடிப்பதற்கு சில காட்சிகளை வேறு என்னிடம் காட்டி பேசினீர்கள். உங்களுக்கு அது மறந்துவிட்டால், நான் சொல்லட்டுமா இயக்குநர் நவீன் சார்.

தொடர்ச்சியாக இவ்வாறு பொய் சொல்லிக் கொண்டே இருந்தீர்கள் என்றால், இது தொடர்பாக வீடியோ ஆதாரமும் என்னிடம் உள்ளது. அதை ஊடகத்திடம் வெளிப்படுத்துவேன். அம்மா கிரியேஷன்ஸ் சிவா தான் என்னை இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்து, உங்களைச் சந்திக்கச் சொன்னார். நீங்கள் ஒரு பெரிய பொய்யர். இந்தப் பேட்டியை அளித்தது நீங்கள் தான். ஒரு ஆணாக உண்மையைப் பேசுங்கள். அல்லது உங்களுக்கு ஞாபக மறதி நோய் இருக்கிறதா. நல்ல ஒரு மனநல மருத்துவரைப் பாருங்கள்” என்றார்.

இதற்கு பதிலளித்த நவீன், “ஆணாக இருப்பதைப் பெருமையாக நினைத்துக் கொள்ளும் ஆள் நான் இல்லை. என்னைவிட பெண்களான எனது அம்மா, அக்கா, மனைவி அனைவருமே துணிச்சல் மிக்கவர்கள். உங்களுக்கு எதோ பெரிய பிரச்சனை இருக்கிறது தயவு செய்து மருத்துவரை அணுகுங்கள். உங்களுடைய முட்டாள்தனமான ட்வீட்களுக்கு இதுதான் என்னுடைய கடைசி பதில்” என்று பதிலளித்திருக்கிறார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Meera mithun allegation director naveen clarifies agni siragugal

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com