”பாலிவுட்டில் என் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது” - மீரா மிதுன்

கோலிவுட்டில் உள்ளவர்கள் ஏன் ஒரு பிரபலமான கதாநாயகியை, தங்களுக்கு ஜோடியாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. 

எஸ். சுபகீர்த்தனா, அந்தரா சக்ரவர்த்தி

கடந்த சில வாரங்களாக பிக் பாஸ் தமிழ் 3 புகழ் மீரா மிதுனுக்கு எதுவும் சரியாக இல்லை. இப்போது அவர் மும்பைக்குச் சென்றுவிட்டார். அவருடன் பேசுகையில், தான் ஏன் மகிழ்ச்சியற்றவளாக இருக்கிறேன் என்பது பற்றி மீரா கூறினார். சமீபத்தில் வெளியான ”நம்ம வீட்டு பிள்ளை” மற்றும் வரவிருக்கும் விஜய் ஆண்டனி-அருண் விஜய் நடித்த ”அக்னி சிறகுகள்” ஆகிய படங்களில் அவருக்கு பதிலாக மற்றவர்கள் நடித்திருப்பதால், அதன் மீதான அதிருப்தியை தெரிவித்தார். இதுபற்றி இயக்குனர் நவீன் தனது ட்விட்டரில்,  அக்ஷராஹாசன் ஷாலினி பாண்டேவுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார், ஆனால் மீரா மிதுனை நாங்கள் ஒருபோதும் முதன்மையான கதாபாத்திரத்திற்காக கமிட் செய்யவில்லை” என்றார்.

மீரா மிதுனுடன் உரையாடலைத் தொடங்கினோம்

சுற்றியுள்ளவர்களால் நீங்கள் மனரீதியாக துன்புறுத்தப்படுகிறீர்கள் என்று ட்வீட் செய்திருந்தீர்களே..

நான் கோலிவுட்டில் 2 ஆண்டுகளும், பேஷன் துறையில் 6 ஆண்டுகளாகவும் இருக்கிறேன். மிகவும் நேர்மறையான நல்ல பெயர் மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை நான் பெற்றிருக்கிறேன். ஆனால் இந்த ஆண்டு, பேஷன் துறையில் இருந்து பலர் எனக்கு எதிராக குழு அமைத்துள்ளனர்.

நீங்கள் அந்த ட்வீட்களை நீக்கியதாகத் தெரிகிறது

கடந்த 2-3 நாட்களாக நிறைய ட்வீட்டுகள் போட்டுக் கொண்டிருப்பதால், அவை அகற்றப்பட்டிருக்க வேண்டும்.

உங்களை சரியாக தொந்தரவு செய்வது என்ன?

நான் எல்லாவற்றிலும் டயர்டாகி விட்டேன். பல பிரச்னைகள் காரணமாக “பை-பை, தமிழ்நாடு” என்று ட்வீட் செய்தேன். என்னை ஏன் தங்கள் அட்டைப்படத்தில் போடுவதில்லை என்று நான் சென்னையைச் சேர்ந்த பத்திரிகைகளிடம் கேட்டேன், நான் பிரபலமாக இல்லாததால் தான் என்று அவர்கள் சொன்னார்கள். பின்னர், பெயர் தெரியாத மாடல்கள் இடம்பெறுவதை நான் கண்டேன். ”நான் தமிழகத்தின் முன்னணி சூப்பர் மாடல்”, நான் பலருக்கும் வழிகாட்டியுள்ளேன். சென்னையில் ஏன் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை என்று என்னிடம் கேட்கிறார்கள். நான் அழைக்கப்படவில்லை. இது எனக்கு பிரச்னையாக இல்லை. ஏனென்றால் தேசிய மற்றும் சர்வதேச தளங்களில் எனக்கு வேலை கிடைக்கிறது.

மேலும் விரிவாகக் கூற முடியுமா?

பிக் பாஸ் தமிழ் 3-க்குப் பிறகு சமூக ஊடகங்களில் அனைவரும் கிண்டல் செய்யுமளவுக்கு எளிதான இலக்காக மாறிவிட்டேன். அந்த ரியாலிட்டி ஷோவில் கலந்துக் கொள்வதற்கு முன்பு ஓரிரு திரைப்படங்களில் கையெழுத்திட்டிருந்தேன். ஒரு பாடல் உட்பட கிட்டத்தட்ட 10 நாட்கள், நம்ம வீட்டு பிள்ளைக்காக படமாக்கப்பட்டேன். பின்னர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றேன். நான் வெளியே வந்த பிறகு, நான் மாற்றப்பட்டிருக்கிறேன் என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள். சரியான விளக்கம் இல்லையென்றால் , சட்டப்பூர்வமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நான் அவர்களிடம் சொன்னேன். “உங்களைச் சுற்றி நிறைய பிரச்னைகள் இருப்பதைக் காண்கிறோம், நாங்கள் ஒரு வழக்கை தொடரலாம்” என்றார்கள் அவர்கள். நான் மேலும் வாதிட விரும்பவில்லை.

”அக்னி சிறகுகளிலும்” இதேதான் நடந்தது. என்னை நடிக்க வைப்பதாக இயக்குனர் நவீன் ஒரு நேர்காணலைக் கொடுத்தார். திடீரென்று, அந்த ரோலுக்கு அக்‌ஷரா ஹாசன் கமிட் செய்யப்பட்டிருப்பதைக் கண்டேன். அவர்கள் என்னை வெளியேற்றியிருப்பது அப்பட்டமாக தெரிந்தது. கோலிவுட்டில் உள்ளவர்கள் ஏன் ஒரு பிரபலமான கதாநாயகி ஜோடியை தங்கள் பக்கத்திலேயே ஏற்றுக்கொள்ள முடியாது என்று எனக்கு புரியவில்லை. கோலிவுட்டில் உள்ளவர்கள் ஏன் ஒரு பிரபலமான கதாநாயகியை, தங்களுக்கு ஜோடியாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை.

கதாநாயகிகள் சொல்வதை யாரும் கேட்பதில்லையா?

ஆனால் நான் என் வழியில் வேலை செய்கிறேன். தமிழர்கள் தங்கள் படங்களில் சக தமிழரை ஏன் விரும்புவதில்லை என்று எனக்குப் புரியவில்லை. வெட்டப்பட்ட அல்லது திருத்தப்பட்ட அல்லது வெளியே எடுக்கப்பட்ட ஒரு காட்சி சினிமாவில் எனக்கு இருந்ததில்லை. இப்போது, நான் எந்த அறிவிப்பும் இல்லாமல் மற்றவர்களால் மாற்றப்படுகிறேன். எல்லோரும் என்னை கை கழுவியதாகத் தெரிகிறது. எனக்கு இனி தமிழகத்தில் மரியாதை இல்லை. பத்திரிகைகள் கூட சர்ச்சைகளை ஏற்படுத்துவதில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன. ஒரு பிரபலமான முன்னணி தேசிய நாளிதழ் என்னிடம் பேசாமல் “நான் ஒரு ஃப்ராடு” என்று செய்தி வெளியிட்டிருந்தது. இது நியாயமில்லை.

நீங்கள் குறிப்பாக யாரைப் பற்றி பேசுகிறீர்கள்?

தாங்கள் புகழ் பெறுவதற்காக யூடியூப்பில் என்னைப் பற்றி மோசமான விஷயங்களைப் பேசிய அனைவரையும் பற்றி நான் பேசுகிறேன்.

பிக் பாஸ் வீட்டைச் சேர்ந்த உங்கள் நண்பர்கள் யாராவது தலையிட்டு ஏதாவது சொன்னார்களா?

பிக் பாஸ் வீட்டினுள் கூட எனக்கு பிரச்சினைகள் இருந்தன. நான் பேசும் ஒரே நபர் சாண்டி மட்டுமே. அவர் ஒரு அன்பான நண்பர். அவரைத் தவிர, நான் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை.

இந்த விஷயங்களை ஏன் ட்வீட் செய்கிறீர்கள்? விஷயங்கள் தீவிரமாக இருந்தால் நீங்கள் முறையாக புகார் செய்திருக்கலாமே

தமிழ்நாட்டில் உள்ள சட்ட அமைப்பு பயனற்றது. அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். ஒரு குற்றவாளி, கடந்த வாரம் கூட கைது செய்யப்பட்டார், ஆனால் இப்போது சமூக ஊடகங்களில் உட்கார்ந்து என்னைப் பற்றி முட்டாள்தனமாகப் பேசுகிறார். எல்லோரும் ஒரு பெண்ணுக்குப் எதிராக இருக்கிறார்கள், ஒரு பெண்ணை மனரீதியாக துன்புறுத்துகிறார்கள். இது சமூக ஊடகமாக இருந்தால், நான் புறக்கணிக்க முடியும். ஆனால் அதற்கு அப்பால் போய்விட்டது. மக்கள் என்மீது வழக்குகளை பதிவு செய்கிறார்கள். முதலாவதாக, ஒரு பெண் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முடியாது. போலீசார் எந்த விதத்திலும் செயல்படவில்லை. நான்  சைபர் பிரிவில் புகாரளித்தேன். ஆணையரிடம் புகார் செய்தேன், எதுவும் நடக்கவில்லை. எனவே, தமிழகம் முழுவதும் எனக்கு எதிரானது என்று உணர்ந்துக் கொண்டேன். எந்த ஒரு நபரும் இதைச் செய்ய முடியாது, ஆகையால் ஒரு குழு இதனை செய்கிறது.

அவர்கள் ஏன் உங்கள் இமேஜை கெடுக்க வேண்டும்?

நான் இரண்டு ஆண்டுகள் போராடினேன். போதும், இதற்கு மேல் என்னால் முடியாது. இப்போது, என் மன அமைதி மிகவும் முக்கியமானது. நான் தற்போது மும்பையில் படபிடிப்பில் இருக்கிறேன்.

இனிமேல் நீங்கள் தமிழ் சினிமாவில் வேலை செய்யப் போவதில்லையா?

ஒருபோதும் இல்லை. நான் ஸ்ரீதேவி மேம், பிரியங்கா சோப்ரா மற்றும் வித்யா பாலன் ஆகியோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறேன். இதை நான் வெளிப்படையாகச் சொல்வேன். நான் மிகவும் திறமையான நடிகை, நடனக் கலைஞர், தமிழ் பேசும் மிகவும் அழகாகன பெண், எனக்குக் கொடுக்கும் எந்தப் பாத்திரத்திற்கும் பொருந்திப் போவேன். ஆனால் நான் ஏன் ஒரு வாய்ப்பையும் பெறவில்லை, ஏன் பெரிய வாய்ப்புகள் என்னிடமிருந்து பறிக்கப்பட்டன? நான் ஏன் இங்கே என் நேரத்தை வீணாக்க வேண்டும்?

நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லையென்றால், அது எனக்கு இழப்பாக இருந்திருக்காது. என்னை வடக்கில் (பாலிவுட்) யாரும் தடுக்க முடியாது. ஹாலிவுட்டில் என்னை யாரும் தடுக்க முடியாது, ஒருவேளை இறுதியாக அது தான் என் நிறுத்தமாக இருக்கும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close