இளைஞருடன் பப்பில் ஆட்டம் போட்ட மீரா மிதுன்! வீடியோ

ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு கூட மணிக் கணக்கில் பேசும் மீரா மிதுன் சக போட்டியாளர்களையும் எரிச்சலாக்கி, நேயர்களையும் இரிட்டேட் மனநிலைக்கு இட்டுச் சென்றார்

ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு கூட மணிக் கணக்கில் பேசும் மீரா மிதுன் சக போட்டியாளர்களையும் எரிச்சலாக்கி, நேயர்களையும் இரிட்டேட் மனநிலைக்கு இட்டுச் சென்றார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
meera mithun pub dance video biggboss - இளைஞருடன் பப்பில் ஆட்டம் போட்ட மீரா மிதுன்... வீடியோ

meera mithun pub dance video biggboss - இளைஞருடன் பப்பில் ஆட்டம் போட்ட மீரா மிதுன்... வீடியோ

பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்களிடையே பரவலாக அறிமுகமானவர் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போது சாக்ஷி தனது தனிப்பட்ட காரணங்களுக்காக இவரை ஒதுக்க, ஏற்கனவே அறிமுகம் கொண்ட அபிராமியும் மீராவை வெறுப்பது போன்றே காட்டிக் கொண்டார்.

Advertisment

இதனால், தொடக்கத்தில் மீரா மீது பிக்பாஸ் நேயர்களுக்கு பாஸிட்டிவ் ரெஸ்பான்ஸ் இருந்தது. ஆனால், அதைத் தொடர்ந்து வீட்டில் அவரது அதிகப்படியான பேச்சும், ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு கூட மணிக் கணக்கில் சம்பந்தமே இல்லாமல் பேசுவதை வழக்கமாக கொண்டு, சக போட்டியாளர்களையும் எரிச்சலாக்கி, நேயர்களையும் இரிட்டேட் மனநிலைக்கு இட்டுச் சென்றார்.

இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு, டாஸ்க்கின் போது சேரன் தவறான இடத்தில் தொட்டதாக பகிரங்கமாக குறை சொல்ல, குறும்படம் போட்டு போட்டுக் கொடுத்தார் பிக்பாஸ். சேரன் மீது தவறில்லை என்று பிக்பாஸ் கேமராக்கள் சொன்னாலும், ஷோவில் இருந்து வெளியேறிய பிறகும் கூட, சேரன் மீதான அவரது புகார் ஓயவில்லை.

இந்நிலையில், மீரா மிதுன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பப்பில் இளைஞருடன் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

Advertisment
Advertisements

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Bigg Boss Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: