/tamil-ie/media/media_files/uploads/2020/04/meera-mithun.jpg)
Meera Mitun, Meera Mitun release bikini video, meera mitun bikini video goes viral, meera mitun bikini, மீரா மிதுன், மீரா மிதுன் பிகினி உடையில் வீடியோ, வைரல் வீடியோ, meera mitun bollywood photo shoot, viral video, தமிழ் வீடியோ, tamil viral video, tamil video, latest tamil video news, tamil viedo news
நடிகை மீரா மிதுன் பாலிவுட்டில் நடிப்பதற்காக வெளியிட்டுள்ள பிகினி போட்டோ ஷூட் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மாடலிங் துறையில் இருந்து நடிகையானவர் மீரா மிதுன். இவர் பிக்பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது நடவடிக்கைகள் மூலம் சர்ச்சைக்குள்ளாகி நிகழ்ச்சியின் டி.ஆர்.பி ரேட்டிங்கை எகிற வைத்தார்.
நடிகை மீரா மிதுன் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து மாடலிங் துறையிலும் புகார்கள் என சர்ச்சையில் சிக்கினார். மீரா மிதுன் அடிக்கடி தனது கவர்ச்சியான் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கவனத்தை ஈர்த்துவருவார்.
மீரா மிதுன் வெளியிடும் ஹாட் புகைப்படங்களை ரசிப்பதற்கு என்று நெட்டிசன்களில் கணிசமானோர் இருந்தாலும் அதே அளவுக்கு அவர் மீது விமர்சனங்கள் வைப்பவர்களும் உள்ளனர்.
இந்த நிலையில், மீரா மிதுன் தனது இன்ஸ்டாகிராமில் அவர் பிகினியில் பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “நீங்கள் எதற்காகவோ கடினமாக உழைக்கிறீர்கள் என்றாஅல் அதை அடையும்போது பெரிதாக உணர்வீர்கள். பாலிவுட்டின் காதலுக்காக” என்று அந்த வீடியொவை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் நான் டவுன் டவுன் மிரர் ஷூட்டிங்குக்காக இப்படி தோற்றமளிக்கிறேன். நீண்ட காலத்துக்குப் பிறகு, நான் என்னை இது போல ஒரு டர்டில் லுக்கில் பார்க்கிறேன். இது ரொம்ப நல்ல அனுபவம். இதில் போட்டோகிராஃபர் ராகுல், ஆடை வடிவமைப்பாளர் ஆர்த்தி. இந்த வாய்ப்புக்கு நன்றி டவுன் டவுன் மிரர், இந்த கவரேஜ்ஜின் வெற்றி நம்பிக்கையுடன்” என்று மீரா மிதுன் ஃபிளையிங் கிஸ் கொடுத்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ள மீரா மிதுனின் இந்த வீடியோவுக்கு பலரும் பாராட்டுதல்களையும் வாழ்த்தையும் தெரிவித்திருந்தாலும் வழக்கம் போல சிலர் விமர்சனங்களையும் வைத்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.