பாலிவுட்டில் மீராமிதுன்? மகிழ்ச்சியில் வெளியிட்ட பிகினி வீடியோ

மாடலிங் துறையில் இருந்து நடிகையானவர் மீரா மிதுன். இவர் பிக்பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானவர். நடிகை மீரா மிதுன் பாலிவுட்டில் நடிப்பதற்காக வெளியிட்டுள்ள பிகினி போட்டோ ஷூட் வீடியோ சமூக ஊடகங்களிலும் இணியத்திலும் வைரலாகி வருகிறது.

By: Updated: April 15, 2020, 11:22:19 PM

நடிகை மீரா மிதுன் பாலிவுட்டில் நடிப்பதற்காக வெளியிட்டுள்ள பிகினி போட்டோ ஷூட் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

மாடலிங் துறையில் இருந்து நடிகையானவர் மீரா மிதுன். இவர் பிக்பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது நடவடிக்கைகள் மூலம் சர்ச்சைக்குள்ளாகி நிகழ்ச்சியின் டி.ஆர்.பி ரேட்டிங்கை எகிற வைத்தார்.

நடிகை மீரா மிதுன் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து மாடலிங் துறையிலும் புகார்கள் என சர்ச்சையில் சிக்கினார். மீரா மிதுன் அடிக்கடி தனது கவர்ச்சியான் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கவனத்தை ஈர்த்துவருவார்.

மீரா மிதுன் வெளியிடும் ஹாட் புகைப்படங்களை ரசிப்பதற்கு என்று நெட்டிசன்களில் கணிசமானோர் இருந்தாலும் அதே அளவுக்கு அவர் மீது விமர்சனங்கள் வைப்பவர்களும் உள்ளனர்.

 

View this post on Instagram

 

The harder you work for something, the greater you will feel when you achieve it ???????????? For the love of bollywood ❣️

A post shared by Meera Mitun (@meeramitun) on


இந்த நிலையில், மீரா மிதுன் தனது இன்ஸ்டாகிராமில் அவர் பிகினியில் பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “நீங்கள் எதற்காகவோ கடினமாக உழைக்கிறீர்கள் என்றாஅல் அதை அடையும்போது பெரிதாக உணர்வீர்கள். பாலிவுட்டின் காதலுக்காக” என்று அந்த வீடியொவை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் நான் டவுன் டவுன் மிரர் ஷூட்டிங்குக்காக இப்படி தோற்றமளிக்கிறேன். நீண்ட காலத்துக்குப் பிறகு, நான் என்னை இது போல ஒரு டர்டில் லுக்கில் பார்க்கிறேன். இது ரொம்ப நல்ல அனுபவம். இதில் போட்டோகிராஃபர் ராகுல், ஆடை வடிவமைப்பாளர் ஆர்த்தி. இந்த வாய்ப்புக்கு நன்றி டவுன் டவுன் மிரர், இந்த கவரேஜ்ஜின் வெற்றி நம்பிக்கையுடன்” என்று மீரா மிதுன் ஃபிளையிங் கிஸ் கொடுத்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ள மீரா மிதுனின் இந்த வீடியோவுக்கு பலரும் பாராட்டுதல்களையும் வாழ்த்தையும் தெரிவித்திருந்தாலும் வழக்கம் போல சிலர் விமர்சனங்களையும் வைத்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Meera mitun release bikini video goes viral bollywood photo shoot

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X