/indian-express-tamil/media/media_files/zXRrirCssqNRmm2TsqZK.png)
கமல்ஹாசனுடன் ‘அன்னை வேளாங்கண்ணி’, ‘உணர்ச்சிகள்’, ‘அபூர்வ ராகங்கள்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஸ்ரீவித்யா.
1953 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி தமிழ் நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி கர்நாடக கிளாசிக்கல் சிங்கர் எம் எல் வசந்தகுமாரி தம்பதிக்கு மகளாக பிறந்தவர் நடிகை ஸ்ரீவித்யா.
இவர் கமல்ஹாசன் உடன் அன்னை வேளாங்கண்ணி, உணர்ச்சிகள் மற்றும் அபூர்வ ராகங்கள் என பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார். அப்போது இருவரும் காதலில் விழுந்துள்ளனர். இதுகுறித்து ஸ்ரீவித்யா பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் தனது காதல் குறித்து சினிமா உலகிற்கும்; சக நடிகர் நடிகைகளுக்கும் தெரியும்.
நான் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்தபோது என் தாயார் எச்சரித்தார்" எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
1970 காலகட்டங்களில் தமிழ் மற்றும் மலையாளத்தில் பிசியான நடிகையாக ஸ்ரீவித்யா வலம் வந்தார். ஸ்ரீவித்யாவின் காதல் குறித்து அறிந்த ரசிகர்கள் கமல்ஹாசன் சிறந்த நடிகர்; எனினும் அவர் ஒரு பிளேபாய் என பதிவிட்டுள்ளனர்.
(Courtesy to iammuhammedaashiq)
ஸ்ரீவித்யா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனும் பல படங்களில் நடித்துள்ளார். ஸ்ரீவித்யா காதலில் விழுந்த போது கமல்ஹாசன் வாணி கணபதியுடன் நெருக்கமாக வாழ்ந்து வந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
பின் நாட்களில் ஸ்ரீவித்யா தாமஸ் என்பவரை உணர்ந்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்க வேண்டாம் என ஒதுங்கி இருந்தார். எனினும் கணவனின் நிர்பந்தத்தை தொடர்ந்து மீண்டும் படங்களில் நடித்தார் எனவும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.