/indian-express-tamil/media/media_files/2025/02/24/VGBLULHyj3gFhOkncmj0.jpg)
2000 ஆண்டுகளில் ஒரு டாப் ஹீரோயினாக வலம் வந்த ஜோதிகா பல வெற்றிப்படங்களில் நடித்தார். அஜித், விஜய், சூர்யா என சினிமாவின் பெரிய ஆளுமைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து மக்களின் பேராதரவை பெற்றார் ஜோதிகா. இவரை சினிமாவிற்கு கொண்டு வர காரணமாக இருந்தது நக்மா.
ஜோதிகாவின் வருகைக்கு முன்னரே நக்மாவும் ஒரு பெரிய நடிகையாகத்தான் கலக்கிக் கொண்டிருந்தார். ரஜினி, பிரபுதேவா, பிரபு, சரத்குமார் என பல முன்னனி ஸ்டார்களுடன் ஆட்டம் போட்ட நடிகையாக நக்மா வலம் வந்தார்.
இவர் நடிக்கும் காலத்தில் மிகவும் பிஸியான நடிகையாகவே காணப்பட்டார் நக்மா. அதனால் தன் தங்கையும் இந்த சினிமாவில் வந்தால் நன்றாக இருக்கும் என பல பேரிடம் சான்ஸ் கேட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால் ஜோதிகாவை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே நக்மா அவருடைய இன்னொரு சகோதரியையும் சினிமாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
சிஷ்யா என்ற படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ரோஷினிதான் நக்மாவின் இன்னொரு சகோதரி. ஜோதிகாவும் ரோஷினியும் உடன் பிறந்த சகோதரிகளாம். நக்மா இன்னொரு அப்பாவுக்கு பிறந்த சகோதரியாம்.
அதாவது நக்மா, ரோஷினி, ஜோதிகாவிற்கு ஒரு அம்மா இரண்டு அப்பா என்று பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார். சிஷ்யா படம் சொல்லிக் கொள்ளும் படி போகவில்லை. இருந்தாலும் அடுத்ததாக அருண்விஜய் நடித்த துள்ளித்திருந்த காலம் படத்திலும் ரோஷினி நடித்திருப்பார்.
அந்தப் படமும் சரியாக ஓடவில்லை. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சிரஞ்சீவியுடன் நடித்திருக்கிறார் ரோஷினி.
இருந்தாலும் அவர் நடித்த எந்தப் படங்களும் சரியாக போகாததால் இந்த சினிமாவிற்கு குட்பை சொல்லிவிட்டு ஒதுங்கி விட்டார் ரோஷினி. அதன் பிறகே ஜோதிகாவை இறக்கியிருக்கிறார் நக்மா.
ஆனால் ஜோதிகாவும் ரோஷினியும் அச்சு அசல் ஒன்று போல் இருப்பார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் குணா படத்தில் நடித்த நடிகையின் பெயரும் ரோஷினிதான்.
ஆனால், ஜோதிகாவின் உடன் பிறந்த அக்கா தான் கமல்ஹாசனுக்கு ஜோடியாக குணா படத்தில் நடித்த ரோஷினி என சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் விக்கிபீடியாவில் இடம்பெற்ற போலியான தகவலை பார்த்து பதிவிட்டு வருகின்றனர்.
கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா மூலம் அறிமுகமானவர் தான் குணா படத்தில் நடித்த ரோஷினி என்று தெரியவந்தது.
தமிழ் மட்டுமின்றி இவர் தெலுங்கு, கன்னட ஆகிய மொழிகளில் மொத்தம் 6 படங்கள் மட்டுமே நடித்துள்ளார். இதனால் நடிகை ரோஷினி பற்றி ரசிகர்களுக்கு பெரிதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.