வசூல் ராஜா பட, ஆனந்த் சார் ஞாபகம் இருக்கா? சந்தானத்தின் ரீல் மாமனார்; அரண்மனை படத்தில் இருக்காரு!

நடிகர் யாத்தின் கார்யேகர், தமிழ் மற்றும் இந்தித் திரைப்படங்களில் பல்துறை நடிகராக வலம் வருகிறார். கமல் ஹாசன் நடித்த வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில், உடலசைவற்ற நோயாளியாகவும் நடித்துப் புகழ்பெற்றார்.

நடிகர் யாத்தின் கார்யேகர், தமிழ் மற்றும் இந்தித் திரைப்படங்களில் பல்துறை நடிகராக வலம் வருகிறார். கமல் ஹாசன் நடித்த வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில், உடலசைவற்ற நோயாளியாகவும் நடித்துப் புகழ்பெற்றார்.

author-image
WebDesk
New Update
yathin karyegar

இந்திய திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வருபவர் யாத்தின் கார்யேகர். பல தசாப்தங்களாகத் தமிழ், இந்தித் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்புப் பயணம், நாடகம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் தொடங்கி, பின்னர் திரைப்படங்களில் நிலைபெற்றது.

Advertisment

யாத்தின் கார்யேகரின் திரை வாழ்க்கையின் திருப்புமுனை, இயக்குநர் சரண் இயக்கத்தில் கமல் நடித்த வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். திரைப்படம். இப்படத்தில், உடலின் எந்தப் பாகமும் செயல்படாமல், கண்கள் மட்டும் உயிர்ப்புடன் இருக்கும் நோயாளிபோல நடித்து, பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்தார். அவரது கண்கள் மூலம் வெளிப்படுத்திய உணர்வுகள், கதாபாத்திரத்தின் ஆழத்தை உணர்த்தியது.

சரண் இயக்கத்தில், கமல்ஹாசன், பிரபு, சினேகா, பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்களின் நடிப்பில், 2004-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் "வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்". இந்த நகைச்சுவைத் திரைப்படம், இந்தியில் வெளியான "முன்னாபாய் எம்.பி.பி.எஸ்" படத்தின் ரீமேக் ஆகும். வெறும் நகைச்சுவை மட்டுமின்றி, மனித உறவுகளின் ஆழமான உணர்வுகளையும், மனிதாபிமானத்தின் முக்கியத்துவத்தையும் மிக அழகாகப் பதிவு செய்த படம் இது.

இந்த படத்தில் இடம்பெற்ற பல கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தன. அதில் ஒரு முக்கியமான கதாபாத்திரம், கோமா நிலையில் இருக்கும் ஆனந்த். இந்த ஆனந்த் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் யத்தின் கார்யேகர். யத்தின் கார்யேகர் ஒரு இந்திய நடிகர், அவர் பெரும்பாலும் இந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். தமிழில் "வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்" படத்தில் அவர் நடித்த ஆனந்த் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

Advertisment
Advertisements

ஆனந்தின் அசைவில்லாத உடலும், உணர்ச்சியற்ற முகமும், பார்வையாளர்களுக்கு ஒருவித பரிதாபத்தை ஏற்படுத்தினாலும், வசூல் ராஜாவின் அக்கறை மற்றும் மனிதாபிமானம் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும். திரையில் குறைந்த நேரம் தோன்றினாலும், யத்தின் கார்யேகர் தனது கதாபாத்திரத்தின் மூலம் பார்வையாளர்களின் மனதில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார். வசனங்கள் இல்லாத இந்த கதாபாத்திரத்தில், அவர் தனது உடல்மொழி மற்றும் முகபாவனைகளால் உணர்வுகளை வெளிப்படுத்தினார். இது அவரது சிறந்த நடிப்புத் திறனுக்கு ஒரு சான்றாகும்.

இவர், நடிகர் சந்தானத்தின் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான எ1 திரைப்படத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்துள்ளார். மேலும் வசூல் ராஜா படத்திற்கு முன்னரே கமல் ஹாசன் நடிப்பில் வெளியான ஹே ராம் படத்திலும் கூட நடிகர் யத்தின் கார்யேகர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு முன்பாக, கமல் ஹாசனின் இயக்கத்தில் இந்தி, தமிழ் என இரு மொழிகளிலும் வெளியான ஹே ராம் திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார்.  இத்திரைப்படத்தில், பாபுஜி (மகாத்மா காந்தி) கதாபாத்திரத்தில் யாத்தின் கார்யேகர் நடித்திருந்தார். நடிகர் சந்தானம் நடிப்பில் 2019-ல் வெளியான ஏ1 திரைப்படத்தில் கதாநாயகியின் தந்தையாக அவர் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான அரண்மனை-4 திரைப்படத்திலும் நடித்து மிரட்டியிருந்தார் யாத்தின் கார்யேகர்.

யாத்தின் கார்யேகர், திரைப்படங்கள் மட்டுமல்லாமல், பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். அவற்றில் சில சாராபாய், வெர்சஸ் சாராபாய், ரங்கரஸ்மியா, ஏக்தா ராம், விஷ்ணு ஆகியன. இவரது கலைப் பயணம், திரைப்படங்கள், நாடகம், தொலைக்காட்சித் தொடர்கள் என பல வடிவங்களில் பரந்து விரிந்துள்ளது. ஒரு குணச்சித்திர நடிகராக, இவர் பல்வேறு வேடங்களில் தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். 

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: