விவாகரத்து பெற்றதாக பிரபல சின்னத்திரை நடிகை ஷாலினி வெளியிட்ட போட்டோஷூட் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், அவரது கணவர் ரியாஸின் தொடர்பு எண்ணை கேட்டு ஆண்கள் சங்கத்தினர் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.
சின்னத்திரையின் பிரபல சீரியல் நடிகை ஷாலினி அவ்வளவாக பிரபலம் இல்லை என்றாலும் கடந்த வாரம் தனது விவாகரத்து குறித்து இவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் புயலை கிளப்பி வருகிறது. தற்போது பல தரப்பினரும் இந்த புகைப்படங்களை பற்றி பேச தொடங்கியுள்ள நிலையில், ஷாலினியின் கணவர் யார் என்று கண்டுபிடித்து கொடுக்குமாறு ஆண்கள் சங்களம் களமிறங்கியுள்ளது.
சின்னத்திரை நடிகை ஷாலினி தூபாய் நிகழ்ச்சிக்கு சென்றிருந்து போது ரியாஸ் என்பருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்தாகவும், திருமணம் செய்ய முடிவு செய்ததுபோது ரியாஸ் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. அதன்பிறகு இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டாலும், பின்னர் ஷாலினி முஸ்லீம் மத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது.
இதனிடையே இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், ரியாஸ் அடிக்கடி தன்னிடம் சண்டையிட்டு அடிப்பதாகவும் இனிமேல் இவருடன் வாழ முடியாது என்றும் முடிவு செய்து விவாகரத்துக்கு முயற்சித்த ஷாலினிக்கு தற்போது விவாகரத்து கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சியில் இருந்த அவர் இதற்காக ஒரு போட்டோஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இந்த புகைப்படங்களை அவர் சமூகவலைதளங்களில் பிரபலமாவதற்காக வெளியிட்டுள்ளார் என்று பலரும் மீம்ஸ் வெளியிட்டு ட்ரோல் செய்து வந்தாலும், தான் பிரபலமாவதற்காக இதை செய்யவில்லை என்று ஷாலினி விளக்கம் அளித்திருந்தார். மேலும் மற்ற பெண்களுக்கு மெசேஜ் சொல்லத்தான் நான் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டேன் என்றும் கூறியிருந்தார்.
If anyone knows her Husband pls help us to connect with him . We will organise a better and bigger celebration for him.#DivorceParty https://t.co/NkuYOugOrM
— NCMIndia Council For Men Affairs (@NCMIndiaa) May 7, 2023
நடிகை இவ்வளவு மகிழ்ச்சியாகவும் விவாகரத்து பெற்றதை போட்டோஷூட்டில் அறிவிக்கும் அளவுக்கு ஜாலியாக இருப்தையும் பார்த்த ஆண்கள் சங்கம் சும்மா இருக்குமா? அந்த நடிகையின் கணவனை கண்டுபிடித்து கொடுங்கள் இதை விட அதிகமாக பெரிய செலிபிரேஷனை நாங்கள் அவருக்காக ஏற்பாடு செய்கிறோம் என ஆன்கள் சங்கம் அறிவித்துள்ளனர். இது தொடர்பான ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“