/tamil-ie/media/media_files/uploads/2017/11/mersal.jpg)
mersal: Aalaporaan Thamizhan Creates new record
Thalapathy Vijay: நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் ’மெர்சல்’.
இயக்குநர் அட்லீ இயக்கியிருந்த இந்தப் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று நடிகைகள் நடித்திருந்தார்கள்.
படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். மெர்சல் திரைப்படத்தில் பாடலாசிரியர் விவேக் எழுதிய ’ஆளப்போறான் தமிழன்’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதோடு உலகெங்கிலும் இருக்கும் தமிழர்கள் மத்தியில் தேசிய கீதமாக பாடப்பட்டது.
தற்போது இந்தப் படத்தின் பாடல் யூ-ட்யூபில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது.
இதனை தற்போது விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பாடலாசிரியர் விவேக்கும் படத்தோடு சமபந்தப்பட்ட ஒவ்வொருத்தருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.