’ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே’ இந்த வரியை மீண்டும் மீண்டும் நிஜமாக்கிக் கொண்டிருக்கிறது மெர்சல் திரைப்படம்.
சீனாவில் மெர்சல்:
கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில், இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் இசையில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கியது மெர்சல் திரைப்படம். படத்தில் விஜய் பேசிய அரசியல் வசனங்களால் செலவே இல்லாமல் படத்திற்கு தேவையான ப்ரோமோஷன் கிடைத்தது.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி, கோரக்பூர் மரணம், மருத்துவத்துறையின் ஊழல்கள் என படத்தில் இடம்பெற்ற சர்ச்சை வசங்கள் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. ஒருபக்க தளபதி விஜய்யின் ரசிகர்கள் படத்தை முதல் நாளிலிருந்தே கொண்டாட துவங்கினார்.
தமிழ், கேரளா,ஆந்திரா என வெளியான அனைத்து மொழிகளிலும் படத்தின் வசூல் பிரமிப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் ஆசியாவின் சிறந்த படமாக ‘மெர்சல்’ படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
மெர்சல் திரைப்படம்
அதே போல் சர்வதேச விருது பரிந்துரைப் பட்டியல்களில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் பிரிவில் தளபதி விஜய் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. மெர்சல் படத்தில் நடித்ததிற்காக விஜய்யின் பெயர் பட்டியலில் இடம் பெற்றது.
இந்நிலையில்,தங்கல், பஜ்ரங்கி பாய்ஜான், சுல்தான் போன்ற இந்திய படங்களுக்கு அடுத்த மெர்சல் திரைப்படமும் சீனாவில் திரையிடப்படுகிறது. சீன மொழியில் டப் செய்யப்பட்டு மெர்சல் திரைப்படம் விரைவில் சீனாவில் வெளியாகும் என்று ஹெச்.ஜி.சி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைவர் லி யிங் அறிவித்துள்ளார்.
ஹெச்.ஜி.சி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மெர்சல் திரைப்படத்தின் உரிமத்தைப் பெற்றுள்ளது. கூடவே பல ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவில் வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படம் என்ற சிறப்பு பெயரையும் மெர்சல் திரைப்படம் பெற்றுள்ளது.