Advertisment

மேதகு : கதையை மறைக்கலாம்; வரலாற்றை மறைக்க முடியாது... நெட்டிசன் ரியாக்‌ஷன்ஸ்

சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பலரும் மேதகு திரைப்படம் குறித்து பாராட்டுதல்களையும் ஆதரவான கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

author-image
WebDesk
New Update
methagu movie, methagu, prabhakaran biopic, ltte, srilanka, மேதகு, மேதகு திரைப்படம், பிரபாகரன், விடுதலைப் புலிகள், நெட்டிசன் ரியாக்‌ஷன்ஸ், tamil politics, methagu movie netizen reactions, director kittu

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட மேதகு திரைப்படம் சினிமா ரசிகர்கள் மற்றும் இலங்கை தமிழர் அரசியல் ஆதரவாளர்கள் இடையே வரவேற்பையும் பாராட்டுதல்களையும் பெற்று வருகிறது. மேதகு திரைப்படம் குறித்து சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பாராட்டுதல்களையும் கலவையான ரியாக்ஷன்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisment

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்காக போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் 2009ம் ஆண்டு நடந்த இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டார். பிரபாகரன் இலங்கை தமிழர்களின் மத்தியில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தமிழர்கள் பலராலும் மதிக்கப்படுகிறார்.

இலங்கை தமிழர்கள் அரசியல் இலங்கையில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் உஷ்ணத்தை ஏற்படுத்துவதாக இருந்து வருகிறது. இலங்கைத் தமிழர்கள் விவகாரம் அரசியலில் மட்டுமல்லாமல், கலை, இலக்கியம் சினிமா போன்ற தளங்களிலும் பேசப்படுகிற விவாதிகப்படுகிற முக்கிய பிரச்னையாக மாறியுள்ளது.

அண்மையில், வெளியான ஃபேமிலிமேன் 2 வெப் சீரிஸ் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் இலங்கை தமிழர்களின் அரசியலையும் தவறாக சித்தரிப்பதாகக் கூறி அந்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சர்ச்சையானது. அதே போல, இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியான ஜகமே தந்திரம் திரைப்படமும் இலங்கை தமிழர்களின் அரசியலைப் பற்றி சரியான புரிதல் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்ததால் சர்ச்சையானது.

இந்த சூழலில்தான், தமிழ்த் தேசிய ஆர்வலரான இயக்குனர் கிட்டு இயக்கத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட மேதகு திரைப்படம் பிஎஸ் வேல்யூ ஓடிடி தளத்தில் ஜூன் 25ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்துக்கு இலங்கை தமிழர்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பும் பாராட்டுதல்களும் கிடைத்து வருகிறது. சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் வரவேற்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மேதகு திரைப்படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “மேதகு இந்த களத்தில் படம் பண்றதுக்கே ஒரு துணிச்சல் வேணும். மேதகு திரைப்படம் பிஎஸ் வேல்யூ தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. மேதகு திரைப்படக் குழுவினருக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பலரும் மேதகு திரைப்படம் குறித்து பாராட்டுதல்களையும் ஆதரவான கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

காவ்யா ரமேஷ் என்பவர் ட்விட்டரில், “ஒரு கதை மறைக்கப்படலாம், வரலாறு மறைக்கப்பட முடியாது” என்று மேதகு திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ஜாஃப்னா ட்ரோல் என்ற ட்விட்டர் பக்கத்தில், “எம்மை வஞ்சிப்பவன் எடுக்கும் படத்துக்கும் எம்மை நேசிப்பவன் எடுக்கும் படத்துக்கும் இடையிலான வித்தியாசம் இதுதான்” என்று ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ் உடன் ஒப்பிட்டு மேதகு திரைப்படத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகுமார் ஃபேன்ஸ் கிளம் என்ற ட்விட்டர் கணக்கில் மேதகு திரைப்படம் குறித்து, “ஈழத்தின் போராட்டத்தையும் அர்ப்பணிப்பையும் உலகுக்கு உரக்கச் சொல்லும் படமாக மேதகு படம் உருவாகி இருக்கிறது. ஈழத்தின் மீதான நற்பார்வை பெருக இந்தப் படம் மகத்தான் வெற்றி பெற வேண்டும், வெல்வோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெங்கட் எம்ஜே என்ற ட்விட்டர் பயனர், “நீங்கள் எந்த கட்சியின், இயக்கத்தின், நடிகரின் ஆதரவாளராகவும் இருக்கலாம். ஆனால், நம்பிக்கையில் ஒப்பிடமுடியாத தலைவரான பிரபாகரனை மீது உங்களுக்கு மதிப்பு இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஒன்றாக நாம் தலைவரின் உன்னத படத்தை பரப்புவோம்.. மேதகு திரைப்படத்தின் பகுதி -2 க்காக காத்திருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மேதகு திரைப்படத்தின் இயக்குனர் கிட்டு, “தமிழருடைய வரலாற்றை திரையில் படைப்பதே எமது லட்சியம். எனது கடமை” என்று தெரிவித்துள்ளார். மேல்ம், தான் கமர்சியல் கதைக்குள்ளேயே வரமாட்டேன். எண்ணற்ற வரலாற்றை நம் முன்னோர்கள் விட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள்… பூட்டிக்கிடக்கும் தமிழருடைய வரலாற்றை பூட்டை உடைத்து கலை வடிவில் நமது வரலாற்றை வெளிக்க்கொண்டு வருவதே எமது லட்சியம் எனது கடமை” என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Prabhakaran Ltte
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment