மகள் பெரிய மனுஷி ஆனபோ என்னால வர முடியல; அப்போ வந்த கோபம்தான்: சீரியல் விலகல் பற்றி மனம் திறந்த மெட்டி ஒலி நிர்மலா!
சில கதாபாத்திரங்கள் நடிகர்களின் நிஜப் பெயரையும் தாண்டி, மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். அப்படி, 'மெட்டி ஒலி' சீரியலில் 'நிர்மலா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து, தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் இடம்பிடித்தவர் நடிகை அருணா.
சில கதாபாத்திரங்கள் நடிகர்களின் நிஜப் பெயரையும் தாண்டி, மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். அப்படி, 'மெட்டி ஒலி' சீரியலில் 'நிர்மலா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து, தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் இடம்பிடித்தவர் நடிகை அருணா.
மகள் பெரிய மனுஷி ஆனபோ என்னால வர முடியல; அப்போ வந்த கோபம்தான்: சீரியல் விலகல் பற்றி மனம் திறந்த மெட்டி ஒலி நிர்மலா!
சில கதாபாத்திரங்கள் நடிகர்களின் நிஜப் பெயரையும் தாண்டி, மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். அப்படி, 'மெட்டி ஒலி' சீரியலில் 'நிர்மலா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து, தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் இடம்பிடித்தவர் நடிகை அருணா. மக்கள் இன்றும் அவரை 'நிர்மலா' என்றே அன்புடன் அழைக்கின்றனர். ஆனால், புகழின் உச்சத்தில் இருந்த அவர், திடீரென சின்னத்திரையிலிருந்து விலகியது ஏன்? என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. சமீபத்தில் அவள் விகடன் யூடியூப் சேனலில் நடந்த நேர்காணல் ஒன்றில், தனது வாழ்க்கையின் சோகமான நிகழ்வுதான் நடிப்பிலிருந்து தான் விலகியதற்கான முக்கியக் காரணம் என்று உருக்கத்துடன் நடிகை அருணா கூறினார்.
Advertisment
நடிகை சித்ரா, தான் நடிப்பிலிருந்து விலகியதற்குப் பல வதந்திகள் வெளியானதாகவும், ஆனால் உண்மை அதுவல்ல என்றும் கூறினார். "எனது மூத்த மகள் 10-ஆம் வகுப்பு படிக்கும்போது, அவளுக்கு நான் உடனிருக்க வேண்டும் என்று நினைத்தேன். பள்ளிக்கு அழைத்துச் செல்வது, மீண்டும் அழைப்பது என தாயாக எனது கடமைகளைச் செய்யவே இந்த இடைவெளி தேவைப்பட்டது" என்றார். தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, குடும்பத்திற்கு ஆதரவாக ஒரு தாயாகத் தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை சித்ரா நினைவுகூர்ந்தார். படப்பிடிப்புக்காக காரைக்குடி, தஞ்சாவூரில் இருந்தபோது, தனது மூத்த மகள் பருவமடைந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. ஒரு தாயாக, தனது மகளுக்கு மிகவும் முக்கியமான அந்தத் தருணத்தில் தன்னால் உடனிருக்க முடியவில்லையே என்று மிகவும் வருந்தினேன் என்றார். பயணக் கட்டுப்பாடுகள், இ-பாஸ் பெறுவதில் இருந்த சிரமம் காரணமாக, தன்னால் உடனடியாக வீடு திரும்ப முடியவில்லை. பிறகு விமானத்தில் திரும்பியபோது, கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டதால், தனது மகளுடன் சேர்வது மேலும் தாமதமானது என்று வருத்தத்துடன் கூறினார் அருணா.
இந்தச் சம்பவம் தனக்கு மிகுந்த குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், "ஒரு முக்கியமான தருணத்தில் தன் மகளுடன் இல்லாததால், நான் கெட்ட அம்மா என்று நினைத்தேன்" என்றும் அவர் உருக்கத்துடன் கூறினார். இந்த அனுபவமே, நடிப்பிலிருந்து நீண்ட இடைவெளி எடுக்க முக்கிய காரணம் என்று அவர் தெரிவித்தார்.
Advertisment
Advertisements
இன்றும், மக்கள் தன்னை நிர்மலா என்றே அழைப்பதாகவும், அந்தப் பெயரைக் கேட்டவுடன் தன்னிச்சையாகத் திரும்பிப் பார்ப்பதாகவும் அவர் சிரித்துக்கொண்டே கூறினார். மேலும், திரையில் பார்த்ததற்கும் நிஜ வாழ்க்கையில் பார்த்ததற்கும் அருணா முற்றிலும் மாறுபட்டிருக்கிறார் என்று தொகுப்பாளர் கூறியபோது, "எனது நிஜ வாழ்க்கையில் நான் மிகவும் நவீனமானவள். அந்தக் கதாபாத்திரத்திற்காகத்தான் அப்படி ஒரு தோற்றத்தை நான் உருவாக்கினேன்" என்று அவர் விளக்கம் அளித்தார்.