அஜித் படத்தில் நடித்து கசப்பான அனுபவம்; சினிமா வாய்ப்பே வேணாம், சீரியல் போதும்: மெட்டி ஒலி நடிகை ஓபன் டாக்!

பிரபல சீரியல் நடிகை அருணா, 'மெட்டி ஒலி' சீரியலில் நடித்த நிர்மலா கதாபாத்திரம், இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. அவர் தனது நடிப்பு வாழ்க்கை, தனிப்பட்ட அனுபவங்கள், மற்றும் அஜித் பட அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

பிரபல சீரியல் நடிகை அருணா, 'மெட்டி ஒலி' சீரியலில் நடித்த நிர்மலா கதாபாத்திரம், இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. அவர் தனது நடிப்பு வாழ்க்கை, தனிப்பட்ட அனுபவங்கள், மற்றும் அஜித் பட அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
metti oli

பிரபல தொலைக்காட்சி நடிகை அருணா, 'மெட்டி ஒலி' சீரியலில் நடித்த நிர்மலா கதாபாத்திரம், இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. அவள் விகடன் யூடியூப் பக்கத்திற்கு அளித்த நேர்காணலில், தனது நடிப்பு வாழ்க்கை, தனிப்பட்ட அனுபவங்கள், மற்றும் அஜித் பட அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

Advertisment

'மெட்டி ஒலி' சீரியலில் அருணா நடித்த நிர்மலா கதாபாத்திரம், ஒரு கோபக்கார வில்லியாக பார்வையாளர்கள் மத்தியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. குடும்ப உறவுகளின் சிக்கல்களைப் பேசும் இந்த சீரியல், தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு மைல்கல் என்றும் கூறலாம். இந்த சீரியலில் வந்த கதாப்பாத்திரத்தால் இன்றும் பலர் இவரை நிர்மலா என்றே அழைத்து வருவதாக அருணா தெரிவித்துள்ளார். அந்தக் கதாபாத்திரத்தின் தாக்கம் எந்த அளவுக்கு இருந்தது என்றால், பல வருடங்கள் கடந்த பின்னரும் மக்கள் அதை மறக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தனது மூத்த மகளின் பள்ளிப் படிப்பு மற்றும் சில சொந்த குடும்பப் பிரச்சனைகள் காரணமாகவே நடிப்பிலிருந்து விலகி இருந்ததாக அருணா தெரிவித்தார். குறிப்பாக, ஊரடங்கு நேரத்தில் தனது மகள் பருவமடைந்தபோது, ஒரு தாயாக அவளுடன் இருக்க முடியாமல் போனது தனக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தியதாகவும், அதுவே இந்த முடிவுக்கு முக்கிய காரணம் என்றும் அவர் பகிர்ந்து கொண்டார்.

அஜித்துடன் ஒரு படத்தில் நடித்த அனுபவம், தனக்கு திருப்தியைத் தரவில்லை என்று அருணா வெளிப்படையாகக் கூறினார். அந்த அனுபவத்திற்குப் பிறகு, திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை மறுத்துவிட்டதாகவும், சீரியல்களே தனக்கு போதும் என்ற முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisment
Advertisements

'மெட்டி ஒலி' சீரியலில் பிரபலமான நடிகை அருணா, அஜித்தின் நடிப்பில் வெளியான "உன்னை கொடு என்னை தருவேன்" (2000) படத்தில் சார்லியின் மனைவியாக நடித்தார். அவர் தனது பேட்டிகளில், அஜித்துடன் இணைந்து நடித்தது குறித்து சில கசப்பான அனுபவங்கள் இருந்ததாகவும், அதன் காரணமாக சினிமாவில் தொடர்ந்து நடிக்கும் ஆர்வம் குறைந்து, சீரியல்களில் கவனம் செலுத்த ஆரம்பித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

'மெட்டி ஒலி' சீரியலில் உடன் நடித்த நடிகை உமா, அருணாவை அடிக்கடி தன்னுடைய வீட்டிற்கு வரும்படி அழைத்ததாகவும், ஆனால் உமாவின் திடீர் மறைவு தன்னை மிகவும் பாதித்ததாகவும் அருணா வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார். அருணா தற்போது ஒரு ஃபேஷன் டிசைனிங் இன்ஸ்டிடியூட் நடத்தி வருகிறார். தனது மூத்த மகளுக்கு ஃபேஷன் டிசைனிங்கில் ஆர்வம் இருந்ததால், அருணா இந்தத் தொழிலுக்குள் நுழைந்துள்ளார். நடிப்பிலிருந்து விலகியிருந்தாலும், சமூக வலைத்தளங்கள் மூலம் தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதாக அவர் கூறினார்.

Tamil Cinema Tamil Cinema Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: