ஆஹா… பார்த்து எவ்ளோ நாளாச்சு… விஜய் டிவியில் என்ட்ரி ஆகும் மெட்டிஒலி நடிகை!

மெட்டி ஒலி சீரியல் நடிகை ரேவதி பிரியா நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் சீரியலுக்கு ரீ எண்ட்ரி ஆகியுள்ளதால் அவருக்கு சீரியல் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

metti oli serial, vijay tv, vijay tv serial, metti oli actress revathi priya, மெட்டி ஒலி, சன் டிவி, விஜய் டிவி, ராஜபார்வை, மெட்டி ஒலி நடிகை ரேவதி பிரியா, revathi priya re entry in vijay tv serial, நடிகை ரேவதி பிரியா சீரியல் ரீ எண்ட்ரி, tamil tv serial news

சன் டிவியில் 2002ம் ஆண்டு ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பு பெற்ற மெட்டி ஒலி சீரியலை யாரலும் மறக்க முடியாது. ‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ என்ற அந்த சீரியலின் டைட்டில் பாடல் இன்றளவும் தமிழகத்தில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அந்தளவுக்கு மெட்டி ஒலி சீரியல் மக்களிடையே புகழ் பெற்று இருந்தது.

மெட்டி ஒலி சீரியலை இயக்குனர் திருமுருகன் அவரே இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மெட்டி ஒலி சீரியலில், திருமுருகனுடன் டெல்லி குமார், காவேரி, காயத்திரி, வனஜா, உமா, ரேகா, சேத்தன், நீலிமா ராணி,போஸ் வெங்கட் மற்றும் திருமுருகன் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த சீரியல் முடிந்து பல ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் மெட்டி ஒலி சீரியலை பற்றி இன்னும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

சன் டிவியில் 5 ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலின் கதை, 5 மகள்களைப் பெற்ற தந்தையும் அவரது குடும்பமும் அதற்குள் நடக்கும் நிகழ்வுகளையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. அதில் நடித்தவர்களை மக்கள் இன்றளவும் மறக்கவில்லை.

மெட்டி ஒலி சீரியலில் பவானி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரேவதி பிரியா. இவர் மெட்டி ஒலி சீரியலுக்குப் பிறகு, கோலங்கள், நிம்மதி, கிரிஜா எம்.ஏ, உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். பின்னர், அவர் தந்தி டிவியில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்து வந்தார். இந்த சூழலில் ரேவதி பிரியா மீண்டும் சீரியலில் நடிக்க முடிவு செய்து ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்.

விஜய் டிவி அண்மைக் காலமாக ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம், ஈரமான ரோஜாவே, பகல் நிலவு, நம் இருவர் நமக்கிருவர், பாரதி கண்ணம்மா என சினிமா பட டைட்டில்களில் சீரியல்களை ஒளிபரப்பிவருகிறது. அந்த வரிசையில், கமல்ஹாசன் நடித்த ராஜபார்வை படத்தின் டைட்டிலில் ஒரு புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் நாம் இருவர் நமக்கிருவர் சீரியலில் நடித்த ராஷ்மி ஜெயராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். முனாஃப் ரஹ்மான் ஹீரோவாக நடிக்கிறார். அதொடு, மெட்டி ஒலி சீரியல் நடிகை ரேவதி பிரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மெட்டி ஒலி சீரியல் நடிகை ரேவதி பிரியா நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் சீரியலுக்கு ரீ எண்ட்ரி ஆகியுள்ளதால், ஆஹா… பார்த்து எவ்ளோ நாளாச்சு… வாங்க வெற்றிவாகை சூடுங்கள் என்று கூறி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Metti oli serial actress revathi priya re entry in vijay tv new serial

Next Story
கண்ணம்மா கற்றுக் கொடுத்த பாடம் இது: சினிமாவை நோக்கி ரோஷினிvijay tv, vijay tv serial, bharathi kannamma serial, bharathi kannamma, விஜய் டிவி, பாரதி கண்ணம்மா, பாரதி கண்ணம்மா சீரியல், கண்ணம்மா, ரோஷினி ஹரிபிரியன், கண்ணம்மா ரோஷினி, rohshini, roshini haripriyan, actress roshini haripriyan, tamil tv serial news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express